சென்னை: விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பாஜகவின் சி டீம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பிரகண்டன மாநாடு நேற்று விக்ரவாண்டி அருகே உள்ள விசாலை கிராமத்தில் மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இதில் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாநாட்டில் விஜய் பேசும்போது தனது கட்சிககு இரண்டு எதிரிகள் உள்ளனர். ஒன்று திராவிட மாடல் என்ற பெயரில் ஊழல் செய்து கொண்டிருக்கும் சக்திகள் மற்றும், பிளவுவாத அரசியல் செய்பவர்களும் கழகத்தின் இரு எதிரிகள் என கூறினார்.
திமுகவையும், பாஜகவையும் இவ்வாறு விஜய் எதிரிகள் என்று கூறிப் பேசியுள்ளது குறித்து இரு கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திராவிட மாடல் அரசை தாக்கிப் பேசிய விஜய்யின் பேச்சுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளை அவர் நேற்று வெளியிட்ட ஜெராக்ஸ் காப்பி மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. திராவிட மாடல் ஆட்சியின் பெருமைகளை தமிழக மக்களிடமிருந்து பிரிக்க முடியாது. அதேபோல் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களிடமிருந்து எடுத்துவிட முடியாது.
எங்களுடைய சில கொள்கைகளுக்கு தான் விஜய் விளக்கம் அளித்துள்ளார். அவர் நேற்று நடத்தியது அரசியல் மாநாடு அல்ல. சினிமா மாநாடு தான். பல அரசியல் கட்சிகளின் ஏ டீம், பி டீம் பார்த்திருப்போம். ஆனால் தமிழக வெற்றி கழகம் பாஜகவின் சி டீம் தான்.
தமிழக மக்களுடைய வெறுப்புக்கு ஆளாகியிருக்கிற ஒருவரைப் பற்றி புகழ்ந்து பேசினால், அங்கே எடுபடாது. தமிழக மக்களுடைய வெறுப்புக்கு ஆளாகியிருக்கிற ஆளுநரைப் பற்றி பேசினால் தான் அவருக்கு கொஞ்சம் மரியாதை கிடைக்கும் என்பதால் ஆளுநரைப் பற்றி பேசியிருக்கிறார். எங்கள் கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என விமர்சித்துள்ளார் அமைச்சர் ரகுபதி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
{{comments.comment}}