சுப்ரீம் கோர்ட் சூப்பர் தீர்ப்பு.. லாலு வீட்டில் மட்டன் சாப்பிட்டு கொண்டாடிய ராகுல் காந்தி

Aug 05, 2023,01:06 PM IST

டெல்லி: ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்து உத்தரவிட்ட நிலையில் நேற்று இரவு ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத்யாதவ் வீட்டில் மட்டன் கறி சாப்பிட்டு ஹேப்பியாக அதைக் கொண்டாடியுள்ளார் ராகுல் காந்தி.


இந்த மட்டன் கறியை லாலு பிரசாத் யாதவே சமைத்து ராகுல் காந்திக்குப் பரிமாறினார் என்பது கூடுதல் விசேஷமாகும்.




சூரத் கோர்ட் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் 2 ஆண்டு கால சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து முதலில் குஜராத் உயர்நீதிமன்றத்திலும்,பின்னர் சுப்ரீம் கோர்ட்டிலும் மேல் முறையீடு செய்தார் ராகுல் காந்தி. சுப்ரீம் கோர்ட், தற்போது இடைக்கால நிவாரணமாக தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.


இந்த சந்தோஷத்தை காங்கிரஸார் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ராகுல் காந்தி தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து நேற்று இரவு லாலு பிரசாத் யாதவின் டெல்லி வீட்டுக்குச் சென்றார். அங்கு அவரை லாலு பிரசாத் யாதவ் உற்சாகமாக வரவேற்றார்.  பின்னர் ராகுல் காந்திக்கு,லாலு பிரசாத் யாதவ் இரவு விருந்து அளித்துக் கெளரவித்தார்.


இந்த விருந்தில் மட்டன் கறி பரிமாறப்பட்டது. இதை லாலுவே சமைத்தாராம். அவரது கையால் பரிமாறவே, நன்கு ருசித்துச் சாப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.  இந்த விருந்துக்காக பீகாரிலிருந்தே ஆட்டுக்கரி உள்ளிட்ட பொருட்களை வரவழைத்திருந்தாரம் லாலு பிரசாத் யாதவ். பீ கார் ஸ்டைலில் அதை சமைத்துள்ளார். அதை ராகுலிடேமே கூறி சந்தோஷப்பட்டாராம் லாலு. இந்த சந்திப்பின்போது நிறைய அரசியல் பேசப்பட்டதாம். தனிப்பட்ட முறையிலும் சிறிது நேரம் ராகுல் காந்தியுடன் பேசிக் கொண்டிருந்தாராம் லாலு பிரசாத் யாதவ்.




டெல்லியில் உள்ள தனது மகள் மிசா பாரதி வீட்டல்தான் லாலு பிரசாத் யாதவ் தற்போது தங்கி ஓய்வெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்