ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்த.. லால் சலாம் படம் ஓடிடியில் ரிலீஸ்.. ரசிகர்கள் ஹாப்பி..!

Aug 27, 2024,03:41 PM IST

சென்னை:   ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்து வெளியான லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். இவர்களுடன் விக்ராந்த், விஷ்ணு விஷால், விக்னேஷ், லிவிங்ஸ்டன்,செந்தில், ஜீவிதா, கே எஸ் ரவிக்குமார் மற்றும் தம்பி ராமையா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.




கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.


கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு அதிரடியாக உருவான லால் சலாம் படம் கடந்த  பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை தரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.


இந்த நிலையில் லால் சலாம் படம் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் சிறப்பு தோற்றத்தில் நடித்த ரஜினியை காணவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


இதற்கிடையே ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் என மிகப்பெரிய நட்சத்திரகள் நடித்த ஞானவேல் ராஜா இயக்கத்தில் வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்