லெட்சுமி (சிறுகதை)

Dec 30, 2024,04:00 PM IST

- கவிதாயினி எழுத்தாளர் இரா. கலைச்செல்வி


ஏலே.....  தனம்ம்... லட்சுமி வந்திருச்சா ?  ‌கொஞ்சம் தண்ணி காட்டி, வைக்கோலை அள்ளிப் போடு....கண்ணுக்  குட்டி செத்ததுல இருந்து அது நல்லாவே இல்ல........... எதுவும்   திங்காமக் கிடக்கு....... பாரேன்.


சரிங்க... அத்தை... தனம், லெட்சுமியை.. மாட்டுக் கொட்டகையில்  கட்டி,... வைக்கோலை அள்ளிப் போட்டாள். பின்னர் பிண்னாக்கு ஊறிய தண்ணியை காட்டினாள்... ஒரு வாய் கூட வைக்கோலைத் திங்கலை. தண்ணிய லேசா குடிச்சுட்டு அப்படியே நிக்குது. கண்ணில் இருந்து மட்டும்... தாரை தாரையாய் கண்ணீர்.. கொட்டுகிறது. 


இதுக்கும்...!!! மனிதர்களுக்கு போல தானே ...மனசு.


காத்தாயிக்கு, லட்சுமியை பார்க்கப் பார்க்க மனதிற்குள் என்னவோ செய்தது.....அதுவும் உயிர் தானே.. மாடுனா அதுக்கும் தாய்ப்பாசம் இருக்குமில்ல!!!!


கன்றை இழந்த தவிப்பு அதன் கண்களில் தெரியுது.... என்ன செய்ய...!!!


ம்ம்...நாளாக நாளாக சரியாயிடும்.....




முனியாண்டியிடம் சொல்லியபடியே ,அவன் ஒரு வைக்கோல் கன்று குட்டியை ரெடி பண்ணி கொண்டுவந்து, வைத்துவிட்டு போனான் . (வைக்கோலில் கன்றுக்குட்டி போல் செய்து , மாட்டுத் தோல்  போர்த்திய உயிரற்ற பொம்மை அது.)


அதை தினமும்  காலையில் , பால் கறக்கும்   முன், லெட்சுமியின் முன் வைத்தவுடன், தெரிந்தோ தெரியாமலோ , அதை லெட்சுமி நக்கத் தொடங்கியவுடன் ,பால் சுரக்க ஆரம்பித்துவிடும்... காத்தாயி பாலைக் கறந்தாள்.... இப்படியே நாட்கள் நகர்ந்தன.


குழந்தை, மலரை கவனமா பாத்துக்கணும் தனம்ம்..... அடிக்கடி தெருவுக்கு ஓடுகிறாள்..கால் முளைச்சுசிருச்சு இல்ல..ஒரு வருஷம் ஆச்சு .... ரொம்ப கவனமா இருக்கணும்...  நடக்கப்  பழகிட்டா... கண்கொத்திப் பாம்பா... பார்த்துக்கணும். தனம்.  எங்கேயாவது பூச்சி பொட்டு கிடக்கும். 


மலர் குட்டிக்கு முதல்ல பருப்பு சோத்த  ஊட்டி... தூங்க வச்சுட்டு, அப்புறம் வேலையை பாரு .... தனம் ..என மருமகளிடம்  அங்கலாய்த்தாள்... காத்தாயி....


நாட்கள் ஓடின. அன்றைக்கு மேயப் போன லெட்சுமி , மாலை மூணு மணி ஆகியும் வரவில்லை. என நினைத்திருந்த வேலையிலே... இருளாயி ஓடிவந்தாள் . காத்தாயி... காத்தாயி.... ஓடிவா.... ஓடிவா .....உங் லெட்சுமிமி...,  மலர் குட்டிய....வா.. வா...  என கூறி அழைத்தாள்... படபடப்புடன் வந்தவள் அதே வேகத்துடன் திரும்பினாள்...


என்ன இருளாகி ....எனனாச்சு.... படபடத்தாள் காத்தாயி... .. அறைக்குள் இருந்த தனம் அதைவிட பதறினாள் ...அத்தை மலரை காணோம்....வா வா.... சொல்லிக்கொண்டே ஓடினாள்... காத்தாயி...


லெட்சுமி , ‌‌ மலர்க் குட்டியை முட்டி விட்டதோ.. காயம்பட்டு விட்டதோ.. ஆயிரம் நினைவுகள்


இருளாயி கூப்பிட்டவுடன்... எதிர் தெருவை நோக்கி, ஓடினாள் காத்தாயி. அங்கே பார்த்தால்  ஒரே கூட்டம். நெஞ்சு படபடத்தது .கூட்டத்தை விலக்கிக் கொண்டு எட்டிப் பார்த்தாள் காத்தாயி....


அங்கே கண்ட காட்சி... பிரமிக்க வைத்தது. காத்தாயிக்கு கண்கள் கலங்கின. கூடியிருந்த அனைவரும் அதே நிலையில் .....ஏதோ இனம் புரியாத தவிப்புடன் 


இதுவரை எங்குமே கண்டிராத காட்சி....


ஓடி வந்த தனம் ,தன் குழந்தை மலரை கண்டவுடன்  மகிழ்ந்து, அதிர்ந்து போனாள் ....


ஆச்சரியத்தில் அனைவரும் மெய்மறந்து நின்றனர்.. எல்லோரும்,  கன்னத்தில், கைவைத்து  திகைத்து நின்றனர்.


கன்றுக்குட்டியை இழந்த சோகம்  லெட்சுமியின் கண்களில் சற்று மறைந்திருந்தது.  மலர் குட்டி , சுகமாய் படுத்துக் கொண்டு, சிரித்து கொண்டிருந்தது.


ஆனால் வேடிக்கை பார்த்த அனைவரின் கண்களிலும் கண்ணீர்..  முகத்தில் ஆச்சரியம். 


அங்கே கண்ட காட்சி இதோ .....  கண்கொள்ளாக் காட்சி.....


லெட்சுமியின்,  இரு கொம்புகளுக்கிடையே, முகத்தைப் பதித்து கொண்டு, சுகமாய்.... மலர்குட்டி, லட்சுமியின் மீது படுத்திருந்த காட்சி.... கண்கொள்ளாக் காட்சி.




(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்