சென்னை: இந்திய விமானப்படை தினத்தையொட்டி சென்னையில் இன்று நடைபெற்ற விமான சாகச கண்காட்சியைக் காண பல லட்சம் பேர் திரண்டு வந்து இந்திய அளவில் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். முற்பகல் 11 மணிக்குத் தொடங்கிய இந்த கண்கவர் கண்காட்சி 1 மணியளவில் கோலாகலமாக நிறைவடைந்தது.
இந்திய விமானப்படையின் 92வது தினம் இந்த முறை சென்னையில் பிரமாண்ட வான் சாகச கண்காட்சியுடன் நடைபெற்றது. இதற்காக கடந்த சில நாட்களாக விமானப்படையின் பல்வேறு வகையான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் சாகச ஒத்திகை செய்து வந்தன. இந்த நிலையில் இன்று கிளைமேக்ஸ்.. அதாவது இன்று முற்பகல் 11 மணி முதல் 1 மணி வரை சாகச கண்காட்சி நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிறகு மக்கள் கூட்டம்:
ரபேல் போர் விமானங்கள் மூலம் சாரங் ஹெலிகாப்டர்கள் வரை விதம் விதமான விமானங்களின், விமானப்படை வீரர்கள், வீராங்கனைகளின் சாகசத்தை மக்கள் கண்டு களித்தனர். இந்திய விமானப்படை உலக அளவில் மிகச் சிறந்த விமானப்படைகளில் முக்கிய இடத்தில் உள்ளது. அப்படிப்பட்ட விமானப்படையின் வீரத்தையும், சாகசத்தையும் இன்று சென்னை மக்கள் கண்டு களிக்கும் வாய்ப்பு கிடைத்த. இதனால் மக்களிடையே பெரும் ஆர்வம் காணப்படுகிறது. குடும்பம் குடும்பமாக மெரீனாவுக்கு மக்கள் படையெடுத்து வந்திருந்தனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போதுதான் மக்கள் மெரீனா கடற்கரை முழுவதையும் நிரப்பியிருந்தனர். உலகம் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட போராட்டம் அது. அதன் பிறகு இப்போதுதான் மக்கள் கூட்டம் மெரீனாக கடற்கரையை நிரப்பியிருந்தது. இதுவும் நாடு முழுவதும் பேசு பொருளானது. உலகின் மிக நீளமான 2வது கடற்கரை என்பதால் பல லட்சம் பேர், அதாவது 10 லட்சம் பேர் வரை திரண்டிருப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
22 வகையான விமானங்கள்:
பொதுமக்கள் பெருமளவில் கூடியிருப்பதால் பல்வேறு வகையான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்திருந்தது. கிட்டத்தட்ட 8000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூடுதல் ரயில்கள், மாடி ரயில்கள், மெட்ரோ ரயில்கள், அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மெட்ரோவில் செல்வோர் அரசினர் தோட்டத்தில் இறங்கி மெரீனாவுக்குச் செல்ல முடியும். வழக்கமாக அண்ணா சதுக்கம் பகுதிக்கு 120 பேருந்துகள் இயக்கப்படும். இன்று கூடுதலாக 75 பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வான் சாகச கண்காட்சிக்கு இந்திய விமானப்படை - திறன், ஆற்றல், சுயசார்பு என்று பெயரிடப்பட்டுள்ளது (indian airforce - Potent, Powerful, and Self-Reliant). கடந்த 20 ஆண்டுகளில் சென்னையில் நடைபெறும் முதல் விமான சாகச கண்காட்சி இது. கிட்டத்தட்ட 22 வகையான விமானங்கள் இதில் பங்கேற்கவுள்ளன. அதில் முக்கியமாக இடம் பெறுபவை -ரபேல், சுகோய்,தேஜாஸ், சூர்யா கிரண் ஆகியவை அடக்கம்.
இந்த விமானக் கண்காட்சி தற்போது லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளிடமிருந்து பிணைக் கைதிகளை மீட்பது, சாரங் ஹெலிகாப்டர் சாகசம், போர் விமான சாகசம் உள்ளிட்ட பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை விமானப்படையினர் நடத்தி மக்களை வியப்புக்குள்ளாக்கினர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், ராணுவ, விமானப்படை அதிகாரிகள் என பல்வேறு விஐபிக்களும் இந்த கண்காட்சியை கண்டு மகிழ்ந்தனர்.
போக்குவரத்து மாற்றங்கள்:
விமான கண்காட்சியையொட்டி அண்ணா சாலை, கடற்கரை காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பாஸ் வைத்திருப்போர் காமராசர் சாலையில் வாகனங்களுடன் பயணிக்க முடியும். அப்படி இல்லாதோர், வாலாஜா சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு கடற்கரைக்குச் செல்லலாம். திருவான்மியூரிலிருந்து பாரிஸ் கார்னர் செல்லும் வாகனங்கள், சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, அண்ணாசாலை மூலமாக தங்களது இடங்களுக்குச் செல்ல வேண்டும். அதேபோல பாரீஸ் டூ திருவான்மியூர் வருபவர்கள் அண்ணாசாலை, தேனாம்பேட்டை, காந்தி மண்டபம் வழியாக செல்லலாம்.
அண்ணா சிலையிலிருந்து வரும் சிட்டி பஸ்கள், வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ரத்னா கபே ஜங்ஷன், ஐஸ்ஹவுஸ் ஜங்ஷன், டாக்டர் நடேசன் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, விஎம் தெரு, மந்தவெளி, மயிலாப்பூர் வழியாகச் செல்லலாம்.
காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை காமராசர் சாலை, அண்ணா சாலை, சாந்தோம் ஹைரோடு, ராதாகிருஷ்ணன் சாலை, கத்தீட்ரல் சாலை, வாலாஜா சாலைகளில் வணிக வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
காமராஜர் சாலை, சாந்தோம் ரோடு, ராதாகிருஷ்ணன் சாலை, வாலாஜா சாலை, அண்ணா சாலை ஆகிய சாலைகளில் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தீபாவளி 2024 : பாரம்பரிய முறையில் எண்ணெய் வைத்து குளிக்க இதுதான் நல்ல நேரம்!
Monsoon: சூடு பிடிக்கும் மழைக்காலம்.. நோய்களைத் தவிர்ப்பது எப்படி.. மாணவர்களுக்கு சூப்பர் டிப்ஸ்!
அக்டோபர் 30 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
கடக ராசிக்காரர்களே.. வெற்றி வாசல் தேடி வரும்.. தனுசு ராசியா.. உஷாரய்யா உஷாரு!
நவம்பர் 1ம் தேதி.. 11 மாவட்டங்களில் பரவலாக கன மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!
Draft electoral Roll: தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய தொகுதி சோழிங்கநல்லூர்.. சிறிய தொகுதி கீழ் வேளூர்!
அதிமுகவை தவெக தலைவர் விஜய் விமர்சிக்காதது ஏன் தெரியுமா?.. எடப்பாடி பழனிசாமி பலே விளக்கம்!
பத்தவச்சுட்டியே பரட்டை.. விஜய் பேச்சால் சலசலப்பு.. கப்சிப்பாக்க அதை கையில் எடுக்குமா திமுக?
Deepavali Rush: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை.. நாளை நீட்டிப்பு.. இரவு 12 மணி வரை இயங்கும்!
{{comments.comment}}