மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி பேரணியைக் காண லட்சக்கணக்கான ரசிகர்கள் மும்பை மெரைன் டிரைவ் பகுதியிலும், வாங்கடே மைதானத்திலும் குழுமியதால் அந்தப் பகுதி முழுவதும் மனிதத் தலைகளாக காணப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை அபாரமாக வீழ்த்தி கோப்பையை வென்றது. இது இந்தியாவுக்கு 2வது டி20உலகக் கோப்பையாகும். ஒட்டுமொத்தமாக நான்காவது கிரிக்கெட் உலகக் கோப்பையாகும்.
உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தது. அங்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த கிரிக்கெட் வீரர்களுக்கு பிரதமர் விருந்தளித்துக் கெளரவித்தார். இதையடுத்து மும்பைக்கு இந்திய அணி கிளம்பியது. மும்பை வாங்கடே மைதானத்தில் இந்திய அணிக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக மெரைன் டிரைவ் பகுதியிலிருந்து அலங்கரிக்கப்பட்ட சிறப்பு பஸ் மூலமாக இந்திய அணியினர் வாங்கடே மைதானத்திற்குப் பேரணியாக செல்லவுள்ளனர்.
இந்திய அணியினரை பார்க்கவும், அவர்களை வரவேற்கவும், வாழ்த்தவும் இன்று பிற்பகலிலிருந்தே ரசிகர்கள் மெரைன் டிரைவ் பகுதியில் குவிந்து விட்டனர். லட்சக்கணக்கில் ரசிகர்கள் குவிந்ததால் கடலே வெட்கப்படும் அளவுக்கு அலை கடலென மனிதத்தலைகளாக மாறியிருந்தது மெரைன் டிரைவ் பகுதி. அதேபோல வாங்கடே மைதானத்திற்குள்ளும் லட்சம் ரசிர்கள் குழுமியுள்ளனர்.
இந்திய அணி ஒராண்டுக்கு முன்பு நடந்த ஒரு நாள் உலகக் கோப்பைத் தொடரில் கோப்பையை வெல்லத் தவறியது. இதனால் ரசிகர்களின் இதயங்கள் நொறுங்கிப் போயிருந்தன. இந்த நிலையில் தற்போது டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றிருப்பதால் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். இதனால்தான் இன்று இந்திய அணியை வரவேற்க வரலாறு காணாத அளவில் திரண்டுள்ளனர்.
வாங்கடே மைதானத்தில் இன்று இன்னொரு வித்தியாசமான காட்சியைக் காண முடிந்தது. இதே மைதானத்தில்தான் கடந்த ஐபிஎல் தொடரின்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்ட்யாவுக்கு எதிராக வன்மத்தைக் கக்கினர் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள். ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதால் வந்த கோபம் அது. ஆனால் இன்று மைதானம் முழுக்க ஹர்டிக் பாண்ட்யா என்று அவரது பெயரை ரசிகர்கள் உற்சாகத்துடன் உச்சரித்து வருகின்றனர். இறுதிப் போட்டியில் இந்தியா வெல்ல ஹர்டிக் பாண்ட்யாவின் அட்டகாசமான பவுலிங்தான் காரணம் என்பது நினைவிருக்கலாம்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}