Lady Don.. ரிவால்வர் ராணி தெரியுமா?.. அவங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சு.. எஸ் பாஸ்!

Mar 12, 2024,07:30 PM IST

டெல்லி: "லேடி டான், மின்ஸ் மேடம், ரிவால்வர் ராணி".. இதெல்லாம் யார் தெரியுமா.. ஒரே ஆள்தான்.. இப்படி பல  செல்லப் பெயர்கள் இருந்தாலும்.. அனுராதா செளத்ரி என்பதுதான் அவரோட ஒரிஜினல் பெயர்.. அவருக்கு இன்னிக்கு காலையில் கல்யாணம் ஆயிருச்சு பாஸ்!


ஒரே தொழிலில் இருப்பவர்கள் கல்யாணம் செய்து கொள்வது சகஜம்தானே.. அதேபோல நம்ம ரிவால்வர் ராணியும், தன்னைப் போலவே ஒரு டானாக வலம் வரும் சந்தீப் எனப்படும் காலா ஜத்தேரி என்ற கேங்ஸ்டரை கல்யாணம் செய்து கொண்டுள்ளார்.


டெல்லியில் உள்ள துவாரகா என்ற ஹோட்டலில் வைத்து இந்தக் கல்யாணம் இன்று காலையில் நடந்துள்ளது. இரு டான்களின் சங்கமம் என்பதால் பிரச்சினை ஏதும் வந்து விடாமல் இருக்க போதிய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. ஆக்சுவலி, நம்ம காலா ஜத்தேரியை திஹார் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். கல்யாணம் செய்வதற்காக அவருக்கு பரோல் கொடுத்து வெளியே கூட்டி வந்திருந்தனர்.  




இந்த டான் கல்யாணத்திற்காக ஸ்வாட் சிறப்புப் படையினர், டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவு, 3வது பட்டாலியன்,  150 முதல் 200க்கும் மேற்பட்ட போலீஸ் படையினர் என ஏகப்பட்ட பேர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர். இன்று கல்யாணத்தை முடித்த கையோடு, ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள மணமகன் வீட்டுக்கு மணமக்கள் செல்லவுள்ளனர். அங்கு வைத்து மேலும் சில குடும்பச் சடங்குகள் செய்யப்படவுள்ளதாம்.


காலா ஜத்தேரி மீது ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. மிகப் பெரிய கும்பலைச் சேர்த்துக் கொண்டு ஆள் கடத்தல், மிரட்டல், பணம் பறித்தல் என பல்வேறு வகையான கிரைம் செயல்பாடுகளில் ஈடுபட்டவர் ஜத்தேரி.  கடந்த 2021ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் சஹரன்பூரில் வைத்து ஜத்தேரியையும், அனுராதாவையும் டெல்லி போலீஸார் கைது செய்தனர். பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


காலா ஜத்தேரி கும்பலைச் சேர்ந்தவர்தான் அனுராதா. இவர் மீதும் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, மிரட்டல், அடிதடி என நிறைய கேஸ்கள் உள்ளன.  இவர் தற்போது ஜாமீனில் வெளியேதான் இருக்கிறார். திருமண வைபவங்கள் முடிந்துதம் ஜத்தேரியை மீண்டும் திஹார் சிறையில் போலீஸார் அடைக்கவுள்ளனராம்.

சமீபத்திய செய்திகள்

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்

news

தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா‌..?

news

மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு

news

சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி

news

பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

news

அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்