Laapataa Ladies.. ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெறத் தவறியது.. இந்தியாவுக்கு ஏமாற்றம்!

Dec 18, 2024,01:57 PM IST

சென்னை: ஆஸ்கார் விருதுக்கான சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவுக்குப் பரிசீலிக்கப்பட்டுள்ள 15 படங்களில் இந்தியாவின் லாபட்டா லேடிஸ் ஹிந்தி திரைப்படம் இடம் பெறத் தவறியுள்ளது.


இந்திய அளவில் ஆண்டுதோறும் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகின்றன. அதில் குறிப்பிட்ட படங்கள் மட்டுமே ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று நல்ல படங்கள் என்ற அந்தஸ்தை பெறுகின்றன. அப்படிப்பட்ட படங்கள் பல்வேறு விருதுகளையும் பெறுகின்றன. உலகம் முழுவதும் உள்ள திரைத் துறையினரின் ஒரே கனவு ஆஸ்கர் விருது எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்பதே. அந்த வகையில் ஆண்டு தோறும் பல சர்வதேச படங்கள் ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடுகின்றன. 



இந்தியாவிலிருந்தும் வருடா வருடம் சிறந்த திரைப்படம் விருதுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. இதுவரை எந்த ஒரு இந்தியப் படமும் சிறந்த (வெளிநாட்டு) படமாக தேர்வு செய்யப்பட்டதில்லை.  இசை, பாடல் என சில விருதுகளை நம்மவர்கள் பெற்றுள்ளனர். ஆனால் சிறந்த வெளிநாட்டுப் பட வரிசையில் இதுவரை எந்த இந்தியப் படமும் தேர்வானதில்லை. தொடர்ந்து  நாமும் போட்டியிட்டுக் கொண்டுதான் உள்ளோம்.

இந்த வருடம் 97 ஆவது ஆஸ்கார் விருதுக்கான கடைசி பரிந்துரைப் பட்டியல் வெளியாகியுள்ளது.  இதில் சிறந்த வெளிநாட்டுப் படப் பிரிவில் 15 படங்கள் இறுதியாக வடித்தெடுக்கப்பட்டுள்ளன். அதில் இந்தியப் படம் லாபட்டா லேடீஸ் இடம் பெறவில்லை. லாபட்டா லேடிஸ் திரைப்படத்தை கிரண் ராவ் இயக்கி, அவரது கணவரான அமீர் கான் தயாரித்துள்ளார். 

இரண்டு இளம் புதுமண தம்பதிகள் திருமணம் செய்து ரயிலில் பயணம் செய்கின்றனர். அப்போது மணப்பெண்கள் தவறுதலாக மாறி விடுகின்றனர். இதனைத் தொடர்ந்து படத்தின் கதை நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம்தான் இந்த லாபட்டா லேடீஸ் திரைப்படம் .

ஆஸ்கார் விருது வென்றால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என அமீர்கான் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது ஏமாற்றமே கிடைத்துள்ளது.

வெளிநாட்டுப் படப் பிரிவில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டுள்ள 15 படங்கள் விவரம்:

I’m Still Here
Universal Language
Waves
The Girl with the Needle
Emilia Pérez
The Seed of the Sacred Fig
Touch
Kneecap
Vermiglio
Flow
Armand
From Ground Zero
Dahomey
How to Make Millions before Grandma Dies
Santosh

இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள படங்களைப் பார்த்து அதற்கு மதிப்பெண் கொடுக்கும் பணி அடுத்து நடைபெறும். இறுதியாக அடுத்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி விருது பெறத் தகுதியான படங்களின் இறுதிப் பட்டியல் வெளியாகும். அதில் இடம் பெறும் ஒரு படத்திற்கு விருது கிடைக்கும். பிப்ரவரி மாதம் நடைபெறும் விழாவில் விருது அறிவிக்கப்பட்டு வழங்கப்படும்.

இந்தியாவுக்கு இதுவரை 7 போட்டி விருதுகள்

இந்தியாவைப்  பொறுத்தவரை இதுவரை 7 முறை போட்டி விருதுகளை ஆஸ்கரில் வென்றுள்ளது. அதில் 2 விருதுகளை ஏ.ஆர். ரஹ்மான் பெற்று அசத்தியுள்ளார். இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி ஒரு விருதினையும், தெலுங்குப் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஒரு விருதையும் பெற்றுள்ளனர். சிறந்த  ஆடை வடிவமைப்புக் கலைஞர் பானு அதையா காந்தி படத்திற்காக ஒரு விருது பெற்றுள்ளார்.  சிறந்த ஒலி வடிவமைப்புக்காக ரெசூல் பூக்குட்டி விருது பெற்றுள்ளார். சிறந்த பாடலாசிரியருக்கான விருதை குல்ஸார் பெற்றுள்ளார். தி எலிபன்ட் விஸ்பரரஸ்ஸ் குறும்படத்திற்காக கான்சாலஸ் , குனீத்மோங்காவுக்கு விருது கிடைத்துள்ளது.

இதைத் தாண்டி மறைந்த இயக்குநர் சத்யஜித் ரேவுக்கு கெளரவ ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்