சென்னை: ஜூன் 4ம் தேதிக்கு பிறகு அரசியலில் இருந்து ராகுல் காந்தி காணாமல் போய்விடுவார். இனி எந்த காலத்திலும் காங்கிரஸ் 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறாது. இதற்கான விடை ஜூன் 4ல் தெரிந்து விடும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் இருப்பவர்கள் ஒடிசா அரசியலை பற்றி தவறாக தகவல்களை பரப்பி கொண்டிருக்கிறார்கள். ஒடிசா முதல்வரை இயக்குவது ஒரு அதிகாரி. அவர் தவறான செயல்களை செய்து கொண்டிருக்கிறார் என்பதைத்தான் எடுத்துக் கூறியிருக்கின்றனர். அதைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும். இது குறித்து விவாதிக்க வேண்டிய அவசியமே இல்லை.
சென்னையில் பள்ளி சிறுமிகள் பாலியல் தொழிலுக்கு தள்ளியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருப்பதாகவே தெரியவில்லை. தமிழகத்தில் அரசு செயல்படுகிறதா என்பதும் தெரியவில்லை. போக்குவரத்து ஊழியர்களுக்கும், காவலர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையில், தமிழக அரசு இருவரையும் அழைத்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து கட்டப்பஞ்சாயத்து செய்து சமாதானம் செய்து வைத்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் செயலற்ற முதல்வர் இருப்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். சென்னையில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கஞ்சா என சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.
தமிழக அரசியலில் பாஜக மிகப்பெரிய வரலாறு படைக்கப் போகிறது. ஜூன் 4ம் தேதி பாஜகவுக்கு மிகப்பெரிய திருவிழாவாக இருக்கப்போகிறது. அந்த நாளுக்கு பிறகு அரசியலில் இருந்து ராகுல் காந்தி காணாமல் போய்விடுவார். இனி எந்த காலத்திலும் காங்கிரஸ் 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது. இதற்கான விடை ஜூன் 4 தெரிந்து விடும்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது இந்தியாவில் ஒவ்வொருவரின் கனவு. ஜெயலலிதாவும் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதேபோல் பொது சிவில் சட்டம் வேண்டும் என்றார். சட்டப்பிரிவு 370 எப்போது நீக்கப்படும் என மாநிலங்களவையில் அவர் பேசியிருக்கிறார். ஜெயலலிதா தொடர்ந்து, இந்துத்துவா மீதும், ஆன்மீகத்தின் மீதும் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். அதற்கு ஆதாரம் வேண்டும் என்றால் மாநிலங்களவை குறிப்பில் இருப்பதை எடுத்துப் பாருங்கள் என்று கூறியுள்ளார்.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}