குற்றம் புதிது.. பூஜை போட்டாச்சு.. இது திரில்லர் படம்தான்.. ஆனா ரொம்ப வித்தியாசமானதாம்..!

May 13, 2024,05:43 PM IST

சென்னை: புதுமுகங்கள் நடிக்கும் வித்தியாசமான த்ரில்லர் படம் தான் குற்றம் புதிது. இப்படத்திற்கு  பூஜை போடப்பட்டுள்ளது.


"குற்றம் புதிது " படத்தை அறிமுக இயக்குனர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.  ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில்  டாக்டர் எஸ் கார்த்திகேயன், தருண் கார்த்திகேயன் பிரமாண்டாமாக தயாரிக்கும் படம். 




கதாநாயகனாக தருண் மற்றும் செஷ்வித்தா நாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் மதுசூதன் ராவ், ராமசந்திரன், பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி, ஸ்ரீநிதி, சங்கீதா மற்றும் தினேஷ் செல்லையா, ஸ்ரீகாந்த், மீரா ராஜ், டார்லிங் நிவேதா ஆகியோர் நடிக்கிறார்கள்.


ரஜித், கிரிஷ் பாடல் வரி எழுத,ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, கரண் பி கிருபா இசையமைக்கிறார். கமலக்கண்ணன் படத் தொகுப்பை கவனிக்கிறார்.  இப்படத்திற்கு மக்கள் தொடர்பாளராக நித்தீஸ் ஸ்ரீராம், மணவை புவன், தயாரிப்பு மேலாளராய் ஆனந்த் பணியாற்றுகிறார். படத்தின் VISUAL EFFECTS பணிகளை WIREFRAME MEDIA நிறுவனம் ஏற்றுள்ளது.




அதிரடியாக உருவாகும் இந்த படம்  “கற்பனைக்கு அப்பாற்பட்டதை எதார்த்தமான பாணியில் பேச காத்திருக்கிறது. இந்த படத்தின் பூஜை இன்று சென்னை பிரசாத் லேபில் சிறப்பாக நடைபெற்றது. படப்பிடிப்பு இம்மாதம் 23ம் தேதி தொடங்குகிறது. இப்படத்தை படக்குழுவினர் ஒரே கட்டமாக எடுத்து முடிக்க இருப்பதாக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகள்

news

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க அரிய வாய்ப்பு

news

2028 அதிபர் தேர்தலுக்குத் தயாராகப் போகிறாரா கமலா ஹாரிஸ்.. அடுத்த திட்டம் என்ன?

news

நவ. 14, 15 கன மழை எச்சரிக்கை.. சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.. மேயர்பிரியா அப்டேட்!

news

ப வரிசைப் பட நாயகன்.. தமிழ்த் திரையுலகின் முத்திரை இயக்குநர்.. பீம்சிங் நூற்றாண்டு விழா.. நாளை!

news

உங்களுக்காக நடனமாடுகிறோம்.. எங்களுக்காக இதைச் செய்யுங்களேன்.. மேடை நடனக் கலைஞர்கள் கோரிக்கை!

news

மீண்டும் இ பாஸ் கட்டாயம்.. கொடைக்கானல், ஊட்டியில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

news

TNPSC குரூப் 2 தேர்வு எழுதியவர்களா நீங்கள்.. சூப்பரான குட் நியூஸ் சொன்ன தேர்வாணையம்..!

news

Weather Report: தமிழ்நாட்டில்.. 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு .. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

news

விஜய் ஆர்கானிக் மாஸ் என்றால்... விசிக என்ன இன்ஆர்கானிக் மாஸா?.. விசிக தலைவர் திருமாவளவன்

அதிகம் பார்க்கும் செய்திகள்