"மோடி" துணைப் பெயர் குறித்த குஷ்புவின் பழைய டிவீட்.. புது சர்ச்சை!

Mar 26, 2023,09:52 AM IST
டெல்லி: மோடி என்ற துணைப் பெயருடன் ஊழலும் இணைந்திருக்கிறது என்று நடிகை குஷ்பு போட்ட பழைய டிவீட் இப்போது புது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஆனால் அது தான் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, கட்சித் தலைமையின் கருத்துக்கேற்ப போடப்பட்ட டிவீட். அது கட்சியின் கருத்து என்று விளக்கியுள்ளார் நடிகை குஷ்பு.

நடிகை குஷ்பு ஆரம்பத்தில் திமுகவில் இருந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் அவர் பாஜகவுக்கு வந்து சேர்ந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்து பல டிவீட்டுகள் போட்டிருக்கிறார். பின்னர் அவர் பாஜகவில் இணைந்தபோது அவரது விமர்சகர்கள், இந்த பழைய  டிவீட்டுகளை எடுத்து வந்து அவரை விமர்சிப்பது வழக்கம். அவரும் அதற்கு பதிலடி கொடுப்பதும் தொடர் கதையாக உள்ளது.



இந்த நிலையில் மோடி துணைப் பெயர் குறித்துக் கூறிய கருத்துக்காக காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சூரத் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் ராகுல் காந்தி கூறியதைப் போலவே முன்பு குஷ்பு போட்டிருந்த டிவீட் மீண்டும் உலா வரத் தொடங்கியுள்ளது. 

2018ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது குஷ்பு இந்த டிவீட்டைப் போட்டிருந்தார். ராகுல் காந்தி 2019ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவதற்கு முன்பே குஷ்பு இந்த டிவீட்டைப் போட்டிருந்தார். அதில், "எங்கு பார்த்தாலும் மோடிதான்.. ஆனால் இது என்ன.. மோடி என்ற துணைப் பெயர் ஊழலுடன் இணைந்திருக்கிறதே. மோடி என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை ஊழல் என்று மாற்ற வேண்டும். அதுதான் பொருத்தமாக இருக்கும். நீரவ், லலித், நமோ = ஊழல்" என்று அந்த டிவீட் இருக்கிறது. இந்தி, ஆங்கிலம் கலந்த டிவீட் அது.

இந்த டிவீட்டை இப்போது காங்கிரஸாரும், திமுகவினரும் எடுத்து வைரலாக்கி வருகின்றனர். ராகுல் காந்தி மீது வழக்குத் தொடர்ந்த பாஜக எம்எல்ஏ பூர்னேஷ் மோடி, குஷ்பு மீதும் வழக்குப் போடுவாரா என்று அவர்கள் கேட்டு வருகின்றனர். இதனால் புது சர்ச்சை வெடித்துள்ளது. ராகுல்காந்தி பேசியதும், குஷ்பு டிவீட்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான். ஒரே வித்தியாசம் என்னவென்றால்.. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியிலேயே இருக்கிறார்.. குஷ்பு பாஜகவில் இருக்கிறார்.. அவ்வளவுதான். இதனால்தான் குஷ்பு மீது வழக்குப் பாயவில்லை என்று பலர் கூறி வருகின்றனர்.

இந்த புது சர்ச்சை குறித்து குஷ்பு கருத்து தெரிவிக்கையில், எனது பழைய டிவீட்டுகளை எடுத்து போடுவதில் காங்கிரஸ் காரர்களுக்கு அலாதிப் பிரியம் உள்ளது. அவர்களுக்கு வேலை இல்லை.. எனவேதான் பழையதை எடுத்து வந்து பேசிக் கொண்டிருக்கிறார். "மோடி" டிவீட்டுக்காக நான் வெட்கப்படவில்லை. அது நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது போட்ட டிவீட். காங்கிரஸ் தலைவர் சொன்னதைத்தான் நான் பின்பற்றினேன். கட்சித் தலைமை என்ன பேசியதோ அதைத்தான் நானும் டிவீட்டில் சொல்லியிருக்கிறேன். இந்த டிவீட்டை நான் அழிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார் குஷ்பு.

2020ம் ஆண்டு காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார் குஷ்பு. சட்டசபைத் தேர்தலிலும் அவர் பாஜக சார்பில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார்.வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அவர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்