"கருப்பு வாளி"யை தலையில் கவிழ்த்துக் கொண்டு போன இம்ரான் கான்.. சீண்டிய குஷ்பு!

Apr 05, 2023,01:29 PM IST
சென்னை: கருப்பு வாளி போன்ற வடிவத்தில் இருந்த குண்டு துளைக்காத ஹெல்மட் அணிந்து கொண்டு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோவைப்  பகிர்ந்து பாகிஸ்தானின் பரிதாப நிலையை சாடியுள்ளார் நடிகை குஷ்பு. 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நேரம் சரியில்லை. அவரைக் கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றபோது, தலையில் பக்கெட் மாதிரியான ஒன்றைக் கவிழ்த்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர் போலீஸார். இந்த "பக்கெட்"  வீடியோ வைரலாகி விட்டது. இது என்ன என்று பலரும் ஆராய ஆரம்பித்து விட்டனர்.



உண்மையில் இது பக்கெட் இல்லை.. மாறாக குண்டு துளைக்காத  ஹெல்மட் ஆகும். தலைவர்கள் பலரையும் தலையில் குறி பார்த்து சுட்டுக் கொல்வது தீவிரவாதிகளின் டெக்னிக் ஆகும். தலையில் சுடும்போது நிச்சயம் மரணம் சம்பவிக்கும் என்பதால் தீவிரவாதிகள் இதைத்தான் பெரும்பாலும் கடைப்பிடிப்பார்கள். முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கூட இப்படித்தான் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் இம்ரான் கானின் இந்த நிலையை கிண்டலடித்து நடிகை குஷ்பு ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில்,  பக்கத்து வீடு ரொம்ப மோசமாக இருக்கிறது. முன்னாள் பிரதமரை தலையில் சுட்டு விடாமல் இருக்க வாளியைக் கவிழ்த்துக் கொண்டு அழைத்துப் போகிறார்கள். இந்த நேரத்தில், நாம் எத்தனை சுதந்திரமாக இருக்கிறோம் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒரு நாடு அன்பினால்தான் கட்டியமைக்கப்பட வேண்டும். வெறுப்பினால் அல்ல என்பதுதான் இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்று கூறியுள்ளார் குஷ்பு.

குஷ்புவின் இந்த டிவீட்டுக்கு திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரை நக்கலாக ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதில், யாருக்கு இந்த அட்வைஸ்.. நண்பர்களே உங்களுக்கு ஏதாவது புரிகிறதா என்று கேட்டிருந்தார். அதற்கும் குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார். அதில்,  சாதாரண கருத்துக்���ும், அறிவுரைக்கும்  உள்ள வித்தியாசத்தைக் கூட உங்களால் புரிந்து கொள்ள முடியாதது சோகம்தான் நண்பரே.. யார் மீதோ உங்களுக்கு உள்ள துவேஷம், இந்த சாதாரண விஷயத்தைக் கூட புரிந்து கொள்ள விடமல் கண்ணை மறைக்கிறதே என்று கூறியுள்ளார் குஷ்பு.

2022ம் ஆண்டு நவம்பர் மாதம் வசீராபாத்தில் நடந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் இம்ரான் கான் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதற்காகத்தான் இந்த பலத்த பாதுகாப்பு மற்றும் தலையில் வாளியுடன் கூடிய பாதுகாப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்குப் பக்கத்தில் வந்த  காவலர்களும் கூட பெரிய சைஸ் தடுப்புகளை அமைத்து இம்ராான் கானை அழைத்துச் சென்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

அதிகம் பார்க்கும் செய்திகள்