அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

Sep 18, 2024,05:26 PM IST

ஊட்டி:  நீலகிரி மாவட்டம் பிக்கப்பத்தி மந்து மலைப்பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்களைக் காண, வெளியாட்கள் செல்ல தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


குறிஞ்சி பூ  நீலகிரி மலை பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையில் பூக்கும் அதிசய பூவாகும். இந்த பூக்கள் நீலநிறத்தில் இருப்பதால் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என பெயர் வந்தது. குறிஞ்சி பூ புதர்வகையை சேர்ந்த செடியாகும். ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா என்பது இப்பூவின் தாவரவியல் பெயராகும். இந்த குறிஞ்சி பூ குடும்பத்தில் கிட்டத்தட்ட 200 வகைகள் உள்ளன. இதில் குறிப்பாக 30க்கும் மேற்பட்ட வகைகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காணப்படுகின்றன. 




நீலகிரியில் உள்ள தோடர் இன ஆதிவாசி மக்கள் தங்களது வயதை குறிஞ்சி பூ பூக்கும் சுழற்சியை வைத்து கணக்கிட்டு வருவார்களாம். எத்தனை முறை குறிஞ்சி பூத்ததைப் பார்த்தார்கள் என்பதை கொண்டு மேற்கு தொடர்ச்சி மலைவாழ் பளியர் பழங்குடியினர் தங்கள் வயதை கணித்துள்ளனர். இந்த குறிஞ்சி பூக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொறு காலங்களில் பூக்கும் தன்மை கொண்டதாகும். 1,3,6,12 ஆண்டுகளில் இவை பூக்கின்றன. இதில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி தற்போது நீலகிரி பகுதிகளில் பூத்துள்ளன.


ஊட்டி அருகேயுள்ள கெங்கமுடி அருகே பிக்கப்பதிமந்து பகுதியில் மலைச்சரிவில் பல இடங்களில் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் ஸ்டோபிலாந்தஸ் மலர்கள் அதிகளவில் பூத்துள்ளன. இந்த மலர்கள் பூத்துள்ள மலை பகுதிக்கு வெளியாட்கள் யாரும் செல்லக் கூடாது என வனத்துறை உத்தரவிட்டுள்ளது.


உத்தரவை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என நீலகிரி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.  குறிஞ்சி மலர்கள் பூத்துள்ள பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதாலும், இங்கு விலங்குகள் நடமாட்டம் இருப்பதாலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்