சென்னை: மகாளய அமாவாசை வருவதால் கும்பகோணத்துக்கு தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலிருந்தும் 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அக்டோபர் 13 முதல் 16 வரை நான்கு நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மஹாளய அமாவாசை என்பது புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையாகும். சாதாரண அமாவாசை அன்று 3 தலைமுறை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். மஹாளய பட்சத்தில் தாய்வழி, தந்தை வழி, ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் தர்ப்பணம் கொடுப்பதே மஹாளய அமாவாசையின் தனிச்சிறப்பாகும்.
இத்தகைய சிறப்பு மிக்க அமாவாசை அன்று கும்பகோணத்திற்கு அதிகளவில் தர்ப்பணம் கொடுக்க மக்கள் வருவார்கள் என்பதால், கும்பகோணத்துக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக கும்பகோண கோட்டம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில், இரண்டாவது சனி, ஞாயிறு வார விடுமுறை, மகாளய அமாவாசையையொட்டி பொதுமக்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 150 பேருந்துகளும், திருச்சியிலிருந்து கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கு 100 பேருந்துகளும் என கூடுதலாக 250 சிறப்பு பேருந்துகள் வரும் 13,14ம் தேதிகளில் இயக்கப்பட உள்ளது.
இதே போன்று பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப 15,16ம் தேதிகளில் சென்னை தடத்தில் 150 சிறப்பு பேருந்துகளும், பிறத்தடங்களில் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
{{comments.comment}}