குலசேகரப்பட்டனம் ராக்கெட் ஏவுதளம்..தமிழ்நாட்டின் நீண்ட நாள் கனவு.. அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

Feb 28, 2024,05:37 PM IST

தூத்துக்குடி: தமிழ்நாட்டின் முதல் ராக்கெட் ஏவுதளம் குலசேகரப்பட்டினத்தில் உருவாகவுள்ளது. தமிழ்நாட்டின் நீண்ட நாள் கனவான இந்த ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளுக்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். 


தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் குலசேகரப்பட்டனம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.  இப்பகுதியில் 2000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி பூங்காவும் அமைக்கப்படவுள்ளது. 




இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் குலசேகரப்பட்டினத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சிறிய ஏவுதளத்தில் இருந்து மதியம் 1:30 மணிக்கு, ஆர்.எச். 200 சவுண்டிங் ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இதில், செயற்கைகோள்களுக்கு பதிலாக காற்றின் திசை வேகத்தை அளவிடும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் விண்ணில் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் காற்றின் திசை வேகம் எவ்வாறு இருக்கும் என்பதை அறிந்து கொள்ள இது உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 


குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி நிறைவடைந்ததும் செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டு முழுமையாக ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் பணிகள் முறைப்படி தொடங்கும் என்று இஸ்ரேல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


குலசேகரப்பட்டனத்தின் முக்கியத்துவம் என்ன?




கிட்டத்தட்ட 2400 ஏக்கர் பரப்பளவில் புதிய ராக்கெட் ஏவுதளம் உருவாகவுள்ளது.   இந்தியாவில் தற்போது ராக்கெட் ஏவுதளமானது ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் மட்டுமே உள்ளது. இதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அதேசமயம், குலசேகரப்பட்டனத்தில் இயற்கையாகவே ராக்கெட் செலுத்துவதற்கான பூகோள சூழல் சிறப்பாக இருப்பதால் அங்கு அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரப்பட்டு வந்தது.


ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளமானது, கடந்த 1971ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இது வங்கக் கடலோரம் அமைந்துள்ளது. இருப்பினும் சில வகை ராக்கெட்டுகள் ஏவுவதற்கு இந்த இடம் சரியானதாக இல்லை. காரணம், ஸ்ரீஹரிகோட்டாவுக்கு தெற்கே இலங்கை உள்ளது.  ராக்கெட் செலுத்தும்போது பிற நாடுகள் மீது அது செல்வது போல இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். இதன் காரணமாக தற்போது ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுகளை கிழக்கு திசையில் செலுத்தி வருகிறார்கள். இதனால் நமக்கு அதிகம் செலவாகும், நேர விரையமும் ஏற்படுகிறது.


ஆனால் குலசேகரப்பட்டனத்தில் இந்த சிக்கல் கிடையாது. குறிப்பாக சிறிய வகை ராக்கெட்டுகளை செலுத்த குலசேகரப்பட்டனம் மிகச் சிறப்பானதாகும்.  அதாவது எஸ்எஸ்எல்வி வகை ராக்கெட்டுகளை இந்த இடத்திலிருந்து செலுத்த முடியும்.  இதனால் கூடுதல் எரிபொருள் செலவாவது மிச்சப்படும். இதற்குக் காரணம், இந்தக் கடல் பகுதியில்  பல ஆயிரம் மைல் பரப்பளவுக்கு எந்த நாடும், தீவும் கிடையாது என்பதே இதற்குச் சாதகமான சூழலாகும். இதனால்தான் குலசேகரப்பட்டனத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலவி வந்தது.


குலசேகரப்பட்டனம் ராக்கெட் ஏவுதளம் நடைமுறைக்கு வந்த பின்னர் தமிழ்நாடும் சர்வதேச விண்வெளி அறிவியல் வரைபடத்தில் இடம் பெறும். உள்ளூர் மக்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பும் கிடைக்கும் சூழல் ஏற்படும்.

சமீபத்திய செய்திகள்

news

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக .. எம்.ஏ. பேபி தேர்வு!

news

தமிழ்நாட்டு மண்ணில் பிரதமர் மோடி உறுதி தர வேண்டும்.. ஊட்டியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

news

நவீன பாம்பன் கடல் பாலம்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.. புதிய ரயிலுக்கும் பச்சைக் கொடி!

news

அமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் சந்திச்சேனா.. நாம் தமிழர் தலைவர் சீமான் திட்டவட்ட மறுப்பு!

news

Tamil Nadu rains.. இன்னும் 10 நாட்களுக்கு மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன் ஹேப்பி நியூஸ்!

news

அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது பெரும் போராட்டம்.. வீதிகளில் இறங்கிய மக்கள்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்