குடியிருந்த கோவில்.. சுருங்கி .. "குய்கோ".. இப்படத்திற்கு "யு" சான்றிதழ்.. டிரெய்லர் ரிலீஸ்!

Nov 21, 2023,06:19 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: முன்னணி கதாபாத்திரங்களில் விதார்த் மற்றும் யோகி பாபு நடித்த குய்கோ திரைப்படம் வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி வெளிவர உள்ளது. இப்படத்திற்கு யு சான்றிதழ் தரப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.


கதாசிரியராக வலம் வரும் அருள் செழியன் முதல் முதலாக குய்கோ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை படத்திற்கு கதை ஆசிரியராக பணியாற்றியவர். இப்படத்தை ஏ எஸ் டி பிலிம்ஸ் எல் எல் பி தயாரித்துள்ளது. ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்ய, அந்தோணி தாசன் இசையமைத்து உள்ளார்.




சிறந்த காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு மற்றும் நடிகர் விதார்த் முன்னணி கதாபாத்திரத்திலும், ஸ்ரீ பிரியங்கா, துர்கா, இளவரசு, முத்துக்குமார் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.


இப்படத்தின் கதையைப் பற்றி இயக்குனர் கூறுகையில், யோகி பாபு வளைகுடா நாட்டில் ஒட்டகம் மேய்ப்பவர். எதார்த்தமாக இவருடைய தாய் தவறி விடுகிறார். தன் தாயைக் காண வருவதற்கு சில நாட்கள் ஆகும் என்ற நிலையில் நடிகர் விதார்த் ஃப்ரீசர் பாக்ஸை அந்த கிராமத்திற்கு கொண்டு வருகிறார். அப்போது ஊர் மக்களுக்கும், விதார்த்துக்கும் இடையே சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. 




அந்தப் பிரச்சினையை எப்படி தீர்க்கிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதையாக உள்ளது. முதலில் இப்படத்திற்கு குடியிருந்த கோவில் என்ற பெயர் பொருத்தமாக இருந்தது. பின்னர் இதனை சுருக்கி குய்கோ என்று பெயர் மாற்றம் செய்தோம் என்று கூறினார்.


இந்நிலையில் இப்படத்தில் ஏ சிவப்பழகி என்ற பாடல் இரண்டு நாட்களுக்கு முன்புதான்  வெளிவந்தது. இப்பாடல்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குடும்பத்துடன் அனைவரும் கண்டு களிக்கும் விதமாக  இப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 




குய்கோ படம் நவம்பர் 24ஆம் தேதி வெளிவரும் நிலையில், விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் மற்றும் சந்தானம் நடித்த 80ஸ் பில்டப் படமும் அந்த நாளில் தான் வெளிவர இருக்கிறது என்பது நினைவிருக்கலாம். மக்கள் மற்றும் ரசிகர்கள் சார்பாக அனைத்து படங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..!!


இதற்கிடையே, இப்படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் இன்று வெளியிட்டார்.

சமீபத்திய செய்திகள்

news

ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க துவங்கியது

news

ரூட்டை மாற்றும் ஃபெஞ்சல்... புயல் கரையை கடப்பதில் தாமதம்... வெதர்மேன் கொடுத்த அப்டேட்

news

சென்னைக்கு 100 கி.மீ தொலைவில் ஃபெஞ்சல் புயல்.. இடைவிடாமல் பலத்த மழை பெய்யக் கூடும்.. IMD

news

புயல் முழுமையாக நீங்க டிசம்பர் 5 வரை ஆகும்.. அதுவரை மழை இருக்கும்.. வானிலை ஆர்வலர் செல்வகுமார்

news

ஃபெஞ்சல் புயலால் கன மழை எதிரொலி.. வீடுகளுக்குள் பாம்பு புகுந்தால்.. இந்த நம்பரில் கூப்பிடுங்க!

news

Lunch box recipe: வாழைப்பூ அரைத்து விட்ட குழம்பு .. செம டேஸ்ட்டி.. சுப்ரீம் ஹெல்த்தி!

news

ஃபெஞ்சல் புயல் + கன மழை எதிரொலி.. சென்னையில் 9 சுரங்கப்பாதைகள் மூடல்.. தாம்பரத்திலும் பாதிப்பு!

news

அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் இலவச உணவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

news

சென்னையில் மிக கன மழை.. பறக்கும் ரயில் சேவை முற்றிலும் ரத்து.. புறநகர் மின் ரயில் சேவையும் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்