சென்னை: யோகி பாபு, விதார்த் ஆகியோரின் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள குய்கோ படம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் மக்களின் வாழ்வியல் பற்றிய படங்கள் அவ்வப்போது வருவது உண்டு. அப்படிப்பட்ட படங்களிலும் இன்னும் சொல்லப்படாத பல கதைகள் இருக்கின்றன என்பது இந்தப் படத்தைப் பார்க்கும் போது புரியும். ஒரு சிறிய விஷயத்தை வைத்து அதில் எந்த அளவுக்கு நகைச்சுவையை வைக்க முடியுமோ அந்த அளவிற்குச் செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் அருள்செழியன்.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஆண்டவன் கட்டளை படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இப்படம் நவம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை பார்த்த அனைவரும் யோகி பாபு மற்றும் விதார்த் ஆகியோர் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும், இயக்குனர் அருள் செழியனின் கதையும் அதை உருவாக்கிய விதமும் ரசிக்கும் படி இருப்பதாகவும், பொதுமக்களின் வாழ்வியலை அழகாக சொல்லி இருப்பதாகவும் பாராட்டி வருகிறார்கள்.
எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் வெளியாகி இருக்கும் குய்கோ படத்தை பலரும் பாராட்டி இருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்து இருக்கிறது. குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக குய்கோ அமைந்து இருப்பது படக்குழுவினருக்கு பெரிய பலமாக அமைந்து இருக்கிறது.
குய்கோ படத்தில், விதார்த் மற்றும் யோகி பாபு முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், பிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பை கவனித்து இருக்கிறார்.
வாய் விட்டு சிரித்து விட்டு.. அப்படியே கொஞ்சம் வாழ்க்கையைப் பற்றியும் சிந்தித்து விட்டு வரணும்னு நினைச்சா குய்கோவுக்குப் போயிட்டு வாங்க.. படம் ஜாலியா இருக்கு.
Cyclone Fengal to cross near Puducherry.. யாருக்கெல்லாம் நாளை ரெட் அலர்ட்?.. IMD Chennai Update
கனமழை எதிரொலி.. அரும்பாக்கம், செயின்ட் தாமஸ் மெட்ரோ நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதைத் தவிருங்கள்!
ஃபெஞ்சல் புயல்.. 2024ம் ஆண்டில்.. வங்கக் கடலில் பிறந்த 3வது புயல்.. வட கிழக்கு பருவ காலத்தில் 2வது!
Cyclone Fengal.. வங்கக் கடல் ஆழ்ந்த காற்றழுத்தம்.. ஃபெஞ்சல் புயலாக மாறியது.. நாளை கரையைக் கடக்கும்
ஃபெஞ்சல் புயல்.. ரெட் அலர்ட் மாவட்டங்களில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர் தகவல்
Red alert: தமிழகத்தில் அதி கன மழை எச்சரிக்கை.. இன்றும் நாளையும் ரெட் அலர்ட் அறிவிப்பு
சென்னையில்.. இன்று மாலை முதல் ஞாயிறு காலை வரை மிக கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்
பல்லடம் அருகே நடந்த விபரீதம்.. 3 பேர் வெட்டிக் கொலை.. தலைவர்கள் கண்டனம்.. வலை வீசும் தனிப்படைகள்!
கோவாவில் அடுத்த மாசம் கல்யாணம்.. திருப்பதியில் சந்தோஷமாக சேதி சொன்ன கீர்த்தி சுரேஷ்!
{{comments.comment}}