சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பரவலாக நல்ல காற்று வீசி வரும் நிலையில் நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் டிசம்பர் 3ம் தேதி கரை அருகே வந்த மிச்சாங் புயலால் ஏற்பட்ட பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக கடும் பாதிப்பை மேற்கண்ட நான்கு மாவட்டங்களும் சந்தித்தன. சென்னையும், புறநகர்களும் வெள்ளத்தில் மிதந்தன. இப்போதுதான் சற்று நிம்மதி கிடைத்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் காற்று சற்று பலமாக வீசியது. ஏற்கனவே டிசம்பர் 15ம் தேதி வந்தால் மழை குறித்து சில தெளிவுகள் கிடைக்கும் என்று தமிழ்நாடுவெதர்மேன் உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர். இதனால் மறுபடியும் மழை வருமோ என்ற பயத்தில் மக்கள் உள்ளனர்.
ஆனால் நாளை மழை பெய்யுமாம்.. ஆனால் பெரிதாக இருக்காதாம், மிதமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். நாளைய மழை குறித்து யாரும் பீதி அடையத் தேவையில்லை என்றும் அவர் ஆறுதல் வார்த்தைகளைக் கூறியுள்ளார்.
அதேபோல 18ம் தேதி முதல் 22ம் தேதி வரைக்கும் கூட சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்களுக்குப் பெரிதாக மழை இருக்காது. அதேசமயம், தெற்கு தமிழ்நாடு மற்றும் காவிரி டெல்டாவில்தான் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வானிலை மையத் தகவல்
இதற்கிடையே, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் பரவலாக இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
16ம் தேதியன்று, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
17ம் தேதியன்று தெற்கு தமிழ்நாட்டின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம், மயிலாடுதுறை, தென்காசி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறகென்னப்பா.. சென்னை அன் கோ ரிலாக்ஸா இருங்க.. மற்ற ஊர்க்காரங்க சூதானமா இருந்துக்கங்க!
Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
{{comments.comment}}