குரோதி தமிழ் வருட ராசிபலன் 2024: விடாப்பிடியான உழைப்பாளிகளான.. மகர ராசி அன்பர்களே!

Apr 07, 2024,05:28 PM IST

கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். முன் கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படுவது நன்மதிப்பை உண்டாக்கும். பேச்சுகளில் தற்பெருமை எண்ணங்களை வெளிப்படுத்துவதை குறைத்துக் கொள்ளவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். வெளியூர் தொடர்பான பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். சுப காரியம் தொடர்பான பயணங்கள் கைகூடும். 


வீடு மற்றும் வாகனங்களை விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைப்பீர்கள். நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மன சஞ்சலங்கள் ஏற்படும். வித்தியாசமான கனவுகளால் ஒரு விதமான குழப்பங்கள் நேரிடும். பொருளாதாரம் தொடர்பான ஆலோசனைகளால் நெருக்கடிகளை குறைப்பீர்கள். தொலைதூர பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். போட்டியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். உணவு விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். வழக்கு விஷயங்களில் எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும். திருமணம் ஆனவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்துவதன் மூலம் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.



வியாபாரிகளுக்கு:


வியாபாரத்தில் அரசு சார்ந்த சில உதவிகள் சாதகமாகும். வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து கொள்வீர்கள். மறைமுக எதிர்ப்புகளால் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். திட்டமிட்ட காரியங்களில் சிறு சிறு தாமதங்கள் ஏற்படும். சக வியாபாரிகள் மத்தியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில் ரீதியான பயணங்களால் புதிய அத்தியாயம் பிறக்கும்.


உத்தியோகஸ்தர்களுக்கு:


உத்தியோகத்தில் எதிர்பாரத அலைச்சல்களால் வருத்தங்கள் நேரிடும். உயர் அதிகாரிகளிடத்தில் புரிதலின்மை உண்டாகும். நிர்வாகப் பணிகளில் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. நினைத்த சில பணிகள் ஈடேறுவதில் பொறுமையுடன் செயல்படவும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். எதிலும் விவேகத்துடனும், பொறுமையுடனும் செயல்படுவதால் பொருளாதார நெருக்கடியை தவிர்க்கலாம்.


கலைஞர்களுக்கு:


கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். சிலருக்கு திருப்பமான சூழலும், வாய்ப்புகளும் உண்டாகும். சவாலான செயல்களையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். அயல் நாட்டு கலைகளில் தனிப்பட்ட ஆர்வமும், ஈர்ப்பும் ஏற்படும். எதிலும் துரிதமாக செயல்படுவது புதிய வாய்ப்புகளை உண்டாக்கும்.


அரசியல்வாதிகளுக்கு:


அரசியல்வாதிகளுக்கு நெருக்கடியாக இருந்துவந்த சில பிரச்சனைகள் குறையும். எதிர்காலம் சார்ந்த குழப்பங்கள் விலகும். தன வருவாய் மேம்படுத்துவது சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். பேச்சுகளில் நுட்பமும், அறிவுத்திறனும் வெளிப்படுத்துவீர்கள். தொண்டர்கள் இடத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்து நடந்து கொள்வது முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.


பெண்களுக்கு:


பெண்கள் அனாவசிய பேச்சுக்களை தவிர்ப்பது, வீண் மனக்கவலையை குறைக்கும். கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வருமான பிரச்சனைகள் விலகும். உறவுகளிடத்தில் கொடுக்கல், வாங்கல் விஷயங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்காலம் சார்ந்த சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.


குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். தாய் வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும்.


மாணவர்களுக்கு:


மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் காலகட்டமாக அமையும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் நல்ல மாற்றத்தை உண்டாக்கும். திட்டமிட்டப் பணிகளை விடாப்படியாக முடிப்பது, நல்ல மதிப்பெண்களை பெற வழிவகுக்கும். ஞாபகம் தொடர்பான பிரச்சனைகள் குறைவதற்கான பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. நண்பர்களிடத்தில் பயனற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். பொழுதுபோக்கு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். போட்டிகளில் சில நுட்பங்களை புரிந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள்.


வழிபாடு:


வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமியை வழிபாடு செய்துவர காரிய வெற்றி ஏற்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்