சென்னை: கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அழகனகான கெட்டப்களில் க்யூட்டான கிருஷ்ணன்களும், ராதைகளும் நாடெங்கும் வலம் வந்து கலகலப்பை ஏற்படுத்தினர்.
இன்று கிருஷ்ண ஜென்மாஷ்டமி எனப்படும் கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. வட மாநிலங்களில் முன்பு இது விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. அதே போல கேரளாவிலும் களை கட்டியிருக்கும். ஆனால் சமீப ஆண்டுகளாக தமிழ்நாட்டிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
குட்டிக் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் போட்டும், ராதை வேடம் போட்டும் பெற்றோர்கள், குடும்பத்தினர் அழகு பார்ப்பது வழக்கம். அந்த வகையில் இன்றும் க்யூட்டான கிருஷ்ணன்களும், ராதைகளும் வீடுகள் தோறும் உற்சாகத்தை ஏற்படுத்தினர். வீடுகளில் குட்டி கிருஷ்ணர் பாதம் கோலமிட்டு பூஜைகளும் செய்யப்பட்டன.
வழக்கம் போல கேரளாவில் இந்த முறையும் கிருஷ்ணர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. குட்டிக் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடம் போட்டு அவர்களை ஊர்வலமாக அழைத்து வந்த நிகழ்வுகள் மாநிலத்தின் பல பகுதிகளிலும் களை கட்டியிருந்தன.
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்துகள் தெரிவித்திருந்தார். அதர்மத்திற்கு எதிராக தர்மத்தை நிலை நாட்டியவர் கிருஷ்ணர் என்று அவர் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருந்தார்.
Tamil Nadu rains.. இன்னும் 10 நாட்களுக்கு மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன் ஹேப்பி நியூஸ்!
நவீன பாம்பன் கடல் பாலம்.. இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி.. பாலம் கடந்து வந்த பாதை!
அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது பெரும் போராட்டம்.. வீதிகளில் இறங்கிய மக்கள்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!
தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!
{{comments.comment}}