கிருஷ்ண ஜெயந்தி 2023 : கஷ்டங்கள் தீர்க்கும் கோகுலாஷ்டமி நன்னாள்

Sep 06, 2023,10:31 AM IST

சென்னை: இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று கிருஷ்ண ஜெயந்தி. மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த அவதாரம், கிருஷ்ண அவதாரம் ஆகும். இது பெருமாளின் எட்டாவது அவதாரம் ஆகும். 

ஆவணி மாதம் தேய்பிறையில் வரும் எட்டாவது திதியான அஷ்டமி நாளில், தேவகியின் எட்டாவது பிள்ளையாக, எட்டாவது அவதாரமான கிருஷ்ண அவதாரத்தை நிகழ்த்தினார் மகாவிஷ்ணு. சாதாரண மனிதனாக பிறப்பெடுத்து, செடி, கொடி, ஆடு, மாடு துவங்கி மனிதர்கள் வரை அனைவருக்கும் தனது அருளையும், அன்பையும் சமமாக பரமாத்மா அளித்த அவதாரம் என்பதால் கிருஷ்ண அவதாரம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.





கிருஷ்ண ஜெயந்தி தேதியும், நேரமும் :

அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்து வரும் நாளே கிருஷ்ண ஜெயந்தி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 06 ம் தேதி இரவு 9.13 மணிக்கு தான் அஷ்டமி திதி துவங்குகிறது. ஆனால் மாலை 3.25 மணிக்கே ரோகிணி நட்சத்திரமும் துவங்கி விடுகிறது. அதே போல் செப்டம்பர் 07 ம் தேதி இரவு வரை அஷ்டமி திதி உள்ளது. இருந்தாலும் ரோகிணி நட்சத்திரமும் மாலை 4 மணி வரை மட்டுமே உள்ளது. இதனால் செப்டம்பர் 06, 07 ஆகிய இரண்டு நாட்களில் எந்த நாளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட வேண்டும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் முறை :




கிருஷ்ணர் அவதாரம் எடுத்தது நள்ளிரவு நேரத்தில் தான். அதனால் கிருஷ்ண ஜெயந்தி பூஜைகள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றை இரவு நேரத்திலேயே செய்ய வேண்டும். பொதுவாக வைணவர்கள் இரண்டு விதமான ஆகமங்களை கடைபிடிப்பதுண்டு. இதில் வைகாசன ஆகமத்தை பின்பற்றுபவர்கள், அஷ்டமி திதி துவங்கியதை அடிப்படையாக வைத்து இரவு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுவார்கள். பாஞ்சராத்திர ஆகமத்தை பின்பற்றுபவர்கள் அஷ்டமி திதியும், ரோகிணியும் சேர்ந்து வரும் மறுநாள் கோகுலாஷ்டமியாக இந்நாளை கொண்டாடுவார்கள். இதனால் இதற்கு ஸ்ரீ ஜெயந்தி என்றும் பெயர்.

வீட்டில் வழிபடும் முறை :

வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுபவர்கள் செப்டம்பர் 6 ம் தேதி மாலை 6 மணிக்கு மேல், வீட்டில் குழுந்தை கிருஷ்ணரின் சிலை அல்லது படம் வைத்து, பூக்களால் அலங்கரிக்க வேண்டும். வீட்டில் வாசல் துவங்கி, பூஜை அழை வரை அரிசி மாவினால் குழந்தை கிருஷ்ணரின் பாதங்களை வரைய வேண்டும். பிறகு அவருக்கு பிடித்த பலகாரங்கள் முறுக்கு, சீடை, லட்டு என என்னவெல்லாம் வைக்க முடியுமோ அத்தனையும் வைத்து வழிபடலாம். முடியாதவர்கள் எளிமையாக அவல், பால் வைத்து வழிபடலாம். கண்ணனுக்கு விருப்பமான பால், நெய், தயிர், மோர், வெண்ணெய் ஆகியவற்றை வைத்து வழிபட வேண்டும்.

கண்ணனுக்குரிய மந்திரங்கள் :



விஷ்ணு சகஸ்ரநாமம் படித்து கண்ணனை வழிபடுவது சிறப்பு. தெரியாதவர்கள் "ஓம் கிருஷ்ணாய நமஹ", "ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே...ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே"   ஆகிய மந்திரங்களை சொல்லி வழிபடலாம். குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த நாளில் கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து உபவாசமாக விரதமிருந்து கண்ணனை வழிபட்டால் அடுத்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்திக்குள் நிச்சயம் குழந்தை பேறு கிடைக்கும்.

செப்டம்பர் 07 ம் தேதி கோகுலாஷ்டமி கொண்டாடுபவர்கள் காலையிலேயே கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். அன்று இரவு வரை அஷ்டமி திதி இருந்தாலும் மாலை 4 வரை மட்டுமே ரோகிணி நட்சத்திரம் உள்ளது. ரோகிணி நட்சத்திரம் முடிந்த பிறகு கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவது முறையல்ல.

சமீபத்திய செய்திகள்

news

Happy Deepavali: பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுங்கள்.. பசுமைப் பட்டாசுகளை வெடியுங்கள்.. தமிழ்நாடு அரசு

news

தீபாவளி கொண்டாடும் மக்களே.. இன்று 15 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை.. வானிலை மையம்

news

தீபாவளி திருநாளையொட்டி.. அயோத்தியில் 25 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி.. புதிய உலக சாதனை!

news

மதுரையில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.11.9 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

news

விஜய்க்கு கோபம் வருவதற்காக தான் அஜித்துக்கு வாழ்த்து கூறுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?: டாக்டர் தமிழிசை

news

Deepavali special.. மொறுமொறுன்னு.. சாப்பிட்டா விறுவிறுன்னு.. ரிப்பன் பூண்டு பக்கோடா!

news

தமிழ்நாட்டில் மழை.. தீபாவளியன்னிக்கு யாருக்கெல்லாம் கன மழை காத்திருக்கு.. லிஸ்ட்டைப் பாருங்க!

news

முத்திரை பதித்த பேரரசர்.. அரசியலின் முக்கிய அடையாளம்.. பசும்பொன் தேவருக்கு விஜய் புகழாரம்

news

டக்குன்னு அஜீத் பக்கம் திரும்பிய உதயநிதி ஸ்டாலின்.. கடகடவென பாலோ செய்த அமைச்சர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்