கோழிப்பண்ணை செல்லதுரை.. இது வெறும் படம் இல்லைங்க.. "வாழ்க்கை".. வாழ்ந்து பார்க்க.. பாருங்க!

Dec 21, 2023,03:38 PM IST

சென்னை: "ஜோ" படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷன் சினிமா ஹவுஸ் டாக்டர்  டி.அருளானந்து தயாரிக்கும் புதிய படம் தான் "கோழிப்பண்ணை செல்லதுரை".  இது ஒரு படம் அல்ல.. வாழ்வியலைச் சொல்லும் பாடம் என்று சொல்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி.


மதுரையில் பிறந்த சீனுராமசாமி அடிப்படையில் ஒரு கவிஞர். எதார்த்த வாழ்வியல் வெளிகளில் கதைகளை பிரதிபலிக்கும்  சீனு ராமசாமி, தனது முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றார். தென்னிந்தியாவில்  மிகவும் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியை தமிழ் சினிமாவில்  தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநயகனாக அறிமுகம் செய்தவர். மேலும், விஜயசேதுபதிக்கு மக்கள் செல்வன் சேதுபதி என்ற பட்டத்தையும் சூட்டியவர்.




நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன்  போன்ற வெற்றி மற்றும் விருதுகள் பெற்ற படங்களை எழுதி இயக்கிய இயக்குநர் சீனு ராமசாமி எழுதி இயக்கும் படம் கோழிப்பண்ணை செல்லதுரை.  இத்திரைப்படம்  கிராமத்து மண் சார்ந்த ஒரு கைவிடப்பட்ட இளைஞனை பற்றிய வாழ்வியல் கதையாகும். காதல் சித்திரமாய் விறுவிறுப்பான திரைக்கதையில் அனைவரும் ரசிக்கும் வகையில் தயாராகும் அதிரடி உணர்ச்சி வாழ்வியல் திரைப்படம்.




இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார்.கதையின் நாயகனாக அறிமுகமாகிறார் ஏகன். இப்படத்தில், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா (அறிமுகம்), லியோ சிவகுமார், திருச்செந்தூர் ஶ்ரீ ராம் (அறிமுகம்) சத்யா (அறிமுகம்), மானஸ்வி, பவா செல்லதுரை மற்றும் பலர் நடிக்கிறார்கள். N.R. ரகுநந்தன் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.




சீனு ராமசாமியின் படங்களில் "வாழ்க்கை" இருக்கும்.. வாழ்வதன் சவால்கள், சங்கடங்கள், சஞ்சலங்கள் கண்டிப்பாக இருக்கும். இப்படமும் அப்படியே இருக்கும் என்ற நம்பிக்கையில் கோழிப்பண்ணையைச் சுற்றிப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

news

தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!

news

எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்