தொண்டர்களின் கண்ணீரில் மிதக்கும் கோயம்பேடு.. வாகனங்கள் திணறல்.. போக்குவரத்து மாற்றம்

Dec 28, 2023,04:18 PM IST

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தவண்ணம் இருப்பதால் அவர் உடல் வைக்கப்பட்டுள்ள கோயம்பேடு பகுதி ஸ்தம்பித்துப் போயுள்ளது. எங்கு பார்த்தாலும் மக்கள் தலையாகவே உள்ளது.


விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை அங்குதான் இறுதிச் சடங்குகளும், நல்லடக்கமும் நடைபெறவுள்ளது. இதையடுத்து தற்போது ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார்.




பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், திரையுலகினர், பொதுமக்கள் என சாரை சாரையாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாக கோயம்பேடு பகுதி முழுவதும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. பொதுமக்கள் கண்ணீருடனும், அழுது புலம்பியபடி கோயம்பேட்டை முற்றுகையிட்டு வருகின்றனர். ஒவ்வொருவரும் விஜயகாந்த் குறித்த  நினைவுகளைப் பகிர்ந்தபடி அழுது புலம்பிக் கொண்டு போவது பார்க்கவே சோகமாக இருக்கிறது.


கோயம்பேடு பகுதியில் அதிக அளவில் மக்கள் குவிவதாலும், வாகனங்கள் குவிவதாலும் அப்பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸார் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் இப்பகுதியில் தங்களது பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளுமாறு காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.


சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்