தஞ்சாவூர்: ஒரு மீன் ரூ.1.87 லட்சத்திற்கு ஏலம் போனதுதான் இப்போது டாக் ஆப் தி தமிழ்நாடு ஆக இருக்கிறது. அப்படி என்னங்க இருக்கு அந்த மீனில் என்றுதான் பலரும் ஆச்சரியத்துடன் கேட்கின்றனர். மேட்டர் இருக்குங்க.
இந்த மீனின் வயிற்றில் இருக்கும் காற்றுப்பைக்கு தான் கிராக்கியும், விலையும் அதிகமாம். இந்த காற்று பை மருத்துவ குணங்கள் அதிகம் கொண்டது என்பதால்தான் இந்த அளவுக்கு இந்த மீனுக்கு விலை வைக்கிறார்கள்.
அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள மல்லிப்பட்டினத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் இருந்து தினமும் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து விற்பனை செய்து வருகின்றனர். இங்கிருக்கும் மீன்களை வாங்கி ஏராளமானவர்கள் ஏலம் விடுவதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்தவர் ரவி. இவர் மீன்பிடிக்க சென்ற போது, இவரது வலையில் அரிய வகை கூரை கத்தாழை மீன் சிக்கியது. 25 கிலோ எடையுள்ள இந்த மீன் 1.87 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது. இதுதான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வகை மீன்களுக்கு செவில் சுவாசத்தோடு, வயிற்று பகுதியிலும் ஒரு சுவாச பையும் கூடுதலாக இருப்பதால், மற்ற மீன்களை விட இந்த மீன்கள் அதிகளவில் சுவாசிக்கும் தன்மை கொண்டிருக்குமாம்.
குறிப்பாக இந்த மீன்களின் அடி வயிற்றில் இருக்கும் சுவாச பை தான் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இந்த சுவாச பைக்கு நெட்டி என்று பெயராம். இந்த நெட்டி ஆண் மீன்களுக்கு பெரிதாகவும், பெண் மீன்களுக்கு சிறிய அளவிலும் இருக்குமாம். இந்த நெட்டி ஐசிங்கிளாஸ் எனும் பளபளக்கும் ஒரு வகை வேதிப்பொருட்களை கொண்டதாகும். இது விலை உயர்ந்த ஒயின் தயாரிக்கவும், மருந்துகள் தயாரிக்க மூலப்பொருளாகவும், ஆண்மையை போக்கும் மருந்தாகவும் இவை பயன்படுகிறது. இந்த நெட்டி கிராம் கணக்கில் விற்பனை செய்யப்பட்டு வருகிறதாம்.
ஒரு மீனில் 50 கிராம் அல்லது 100 கிராம் நெட்டி கிடைக்கும் என்று மீனவர்கள் கூறுகின்றனர். இந்த வகை மீன்கள் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கும் எற்றுமதி செய்யப்படுவதும் உண்டாம். இந்த கூரைக் கத்தாழை மீன் கிடைத்தால் அதைப் பிடிக்கும் மீனவர் லட்சாதிபதி ஆவது உறுதி என்று மீனவ மக்கள் சந்தோஷமாக கூறுகிறார்கள்.
CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா
14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை
தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!
400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
தமிழகத்தில்.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!
விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!
{{comments.comment}}