மீண்டும் ஒரு பாலியல் சம்பவம் நடக்கும் வரை காத்திருக்க முடியாது.. சுப்ரீம் கோர்ட் சுளீர் கருத்து

Aug 20, 2024,05:32 PM IST

கொல்கத்தா:   கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தாமாக வழக்கு தொடர்ந்த நிலையில் இன்று தலைமை நீதிபதி அமர்வு விசாரணை மேற்கொண்டது. மருத்துவர்கள் பாதுகாப்பு தொடர்பாக ஆராய, வழிமுறைகளை உருவாக்க தேசிய அளவிலான குழு அமைக்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இச்சம்பவத்திற்கு வன்மையாக கண்டனம் தெரிவித்து பயிற்சி பெண் மருத்துவரின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது. 




இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்கள் தங்களின் மருத்துவ சேவைகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே போலீசார் மருத்துவர்களிடம் போராட்டத்தை கைவிட சமரசம் பேசியும், முடியவில்லை. பின்னர் இந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதனால் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.


மறுபுறம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவுப்படி, பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து  ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளது. பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் நடைபெற்றது.


தேசியக் குழு அமைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு


வழக்கு விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிபதி சந்திரசூட் மேற்கு வங்க அரசுக்கு பல்வேறு கேள்விகளை வைத்தார். பின்னர் தலைமை நீதிபதி கூறுகையில், மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணியை தொடர வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், புகைப்படங்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பரவி உள்ளது. இதுதான் உயிரிழந்த பெண்ணுக்கு கொடுக்கும் மரியாதையா?. டாக்டர்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை?.


நடவடிக்கை எடுக்க இது போன்ற சம்பவம் மீண்டும் அரங்கேறும் வரை காத்திருக்க முடியாது. மேற்குவங்க அரசால் ஏன் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் போனது?. இது கொல்கத்தா மருத்துவமனை பிரச்சனை மட்டுமே அல்ல. ஒட்டுமொத்த மருத்துவர்களின் பிரச்சனை. இந்த வழக்கில் வியாழக்கிழமைக்குள் விசாரணை நிலையை அறிக்கையாக சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும். பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும் என்று பெஞ்ச் தெரிவித்தது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்