1000 வருடம் பழமையான.. கொடைரோடு ஸ்ரீகுருநாத சுவாமி கோவில்.. 100 வருடங்களுக்குப் பின் கும்பாபிஷேகம்!

Feb 18, 2025,05:56 PM IST

- தேவி


மதுரை: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ஸ்ரீகுருநாத சுவாமி கோவிலில் 100 வருடங்களுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு மகிழ்ந்தனர்.


குலதெய்வ வழிபாடு என்பது நமது குலத்தை காக்கும் கடவுளை குறிக்கும் என்பதாகும். எந்த ஒரு நல்ல விஷயத்தை செய்வதாக இருந்தாலும் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் போதும் தமிழர்கள் தங்களது வீட்டில் குலதெய்வத்தை நினைத்து காசு முடிந்து வைத்து தனது வேலையை தொடங்குவார்கள். இப்படி செய்வதால் அவர்கள் மேற்கொள்ளும் விஷயங்கள் நல்ல முறையில் நிறைவேறும் என்பது அவர்களது நம்பிக்கையாக இருந்து வருகின்றது.




இப்படி குலதெய்வங்களை போற்றி வணங்கும் குடும்பங்கள் தமிழ்நாட்டில் அதிகம். அப்படி ஒரு குலதெய்வத்தை பற்றி இன்று பார்க்கப் போகிறோம். மதுரை அருகே , திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகில் உள்ள கொடைரோட்டில் அமைந்துள்ளது ஸ்ரீ குருநாத சுவாமி கோவில்.


கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள் பழமையாது இக்கோவில். பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட பெருமைக்குரியது. காலப் போக்கில், நாயக்க மன்னர்கள் இக்கோவிலை பராமரித்து போற்றி வந்தனர். ஆட்சி மாற்றங்கள், போர் போன்ற காரணங்களால் இக்கோவில் பாளையக்காரர்கள் வசம் போய் விட்டது. பாளையக்காரர்கள், இக்கோவிலை சிறப்பாக பராமரித்து வந்தனர். 




இக்கோவிலானது மாலையகவுண்டம்பட்டி கணக்குப்பிள்ளை பங்காளிகளின் முதன்மையான குலதெய்வமாக இருக்கின்றது என்பது இதன் சிறப்பம்சங்களில் ஒன்று. சமயநல்லூரில் இருந்து பள்ளப்பட்டி வரை இந்தக்  கோவிலை குல தெய்வமாக ஏற்றவர்கள் உள்ளனர். இக்கோவில் ஒரு சிவ தலமாகும். இங்கு சிவபெருமான் "ஆடி அமர்ந்த கோலம்" ரூபத்தில் காட்சியளிக்கின்றார். இக்கோவிலில் சீலக்காரி அம்மனுக்கும் தனி பீடம்  உண்டு. 




இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இக்கோவிலில், சமீபத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாகவும்  விமரிசையாகவும் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகமானது 100 வருடங்களுக்குப் பிறகு நடைபெற்றது என்பது இதன் சிறப்பு அம்சமாகும். கும்பாபிஷேக தினத்தன்று 2000 பக்தர்களுக்கு அன்னதானம் அழைக்கப்பட்டது என்பது மற்றொரு சிறப்பாகும்.


சரி இந்தக் கோவிலுக்கு எப்படிப் போக வேண்டும்?




ரொம்ப சிம்பிள்.. மதுரையிலிருந்தோ அல்லது வேறு எந்த ஊரிலிருந்து வந்தாலும், ரயிலில் வருவதாக இருந்தால் கொடைரோடு ரயில் நிலையத்தில் இறங்கினால் போதும். அங்கிருந்து யாரிடம் கேட்டாலும் கோவிலைக் கூறுவார்கள். நடந்த செல்லும் தூரத்தில்தான் கோவில்  உள்ளது.


பஸ்சில் வருவதாக இருந்தால், கொடைரோடு பஸ் நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் தான் கோவில் உள்ளது. ஒருமுறை போய் வாருங்கள், குருநாத சுவாமியின் அருளைப் பெற்று நலம் பெறுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!

news

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

news

மகள், கணவரின் Mental Torture.. வருங்கால மருமகனுடன் எஸ்கேப் ஆன மாமியார்.. திரும்பி வந்ததும் டிவிஸ்ட்!

news

வேண்டியதை நடத்தித் தரும் அபிஜித் நேரம்.. அற்புதமான அந்த 24 நிமிடங்கள்!

news

பாபா வங்கா சொன்னது நடக்கப் போகிறதா?.. திக் திக் பரபரப்பு எதிர்பார்ப்புடன் உலக நாடுகள்!

news

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பா?.. திட்டவட்டமாக மறுத்தது மத்திய அரசு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 19, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

தங்கம் விலையில் மாற்றமில்லை.... நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது!

அதிகம் பார்க்கும் செய்திகள்