கொடைக்கானல்: கொடைக்கானல் செல்ல இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இ-பாஸ் பெற்றுள்ளதாக தமிழக அரசு சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் பெருமளவு வருவதாலும், இதனால் அங்கு வாகனங்கள் அதிகளவில் வருவதினால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாகவும், இபாஸ் நடைமுறை பிறப்பிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து இங்கு இ-பாஸ் நடைமுறை மே 7 முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆன்லைன் மூலம் இதைப் பெறலாம். இ-பாஸ் நடைமுறை ஜூன் 30 வரை அமலில் இருக்கும். இது குறித்து தமிழக அரசு சில விளக்கங்களை வெளியிட்டது. அதில், ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் இ-பாஸ் பெற்றுக்கொண்டு வரவேண்டும். சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருவோருக்கு வேறு எந்த கட்டுப்பாடும் இல்லை. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொடைக்கானல் செல்வதற்காக இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இ-பாஸ் பெற்றுள்ளதாக அரசு தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கொடைக்கானல் செல்ல 54,112 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நாளொன்றுக்கு சராசரியாக 10 ஆயிரம் வாகனங்கள் இ-பாஸ் கேட்டு பதிவு செய்வதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த இ-பாஸ் முறையால் சராசரியாக ஒரு நாளைக்கு 1500 வாகனங்கள் கொடைக்கானல் பகுதிகளில் உலா வருவதாகவும், இதனால் கூட்ட நெரிசல் இல்லாமல் சுற்றுலா பயணிகள் நிம்மதியாக சுற்றிப் பார்க்க முடிவதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இ பாஸ் பெறுவது சுலபமாகவே இருப்பதால் கொடைக்கானல் வர விரும்பும் சுற்றுலாப் பயணிகளும் கூட ஹேப்பிதான்.!
Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
{{comments.comment}}