"அழகே உன்னை".. ப்யூட்டியை ஆராதனை செய்யும் நாடுகள்.. எதுன்னு தெரியமா?

Apr 02, 2023,01:19 PM IST

சென்னை: அழகை ஆராதிக்காதவர்கள் என்று யாரேனும் இருக்க முடியுமா.. அழகை ரசிப்பது மட்டுமல்லாமல் அதை போஷித்து ஊக்குவிக்கும் நாடுகள் நிறையவே உள்ளன.  அப்படிப்பட்ட நாடுகளை பார்ப்போமா.


ஒவ்வொருவரும் அழகாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். வீட்டை விட்டு வெளியே போகும்போது பார்க்க பளிச்சென இருக்க வேண்டும் என்பதே பலரின் நினைப்பாக இருக்கும். பெரிய அளவில் மேக்கப் போடுவோர் மற்றும் சிம்பிளாக பவுடர் மட்டும் அடித்துக் கொண்டு கிளம்புவோர் வரை நம்மை அலங்காரப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் உள்ளோர்தான் அதிகம்.




இந்த நிலையில்  அழகு குறித்த விழிப்புணர்வு அதிகம் உள்ள நாடுகள் சில உள்ளன. அவற்றைத்தான் இங்கு பார்க்கப் போகிறோம். இந்த நாடுகளில் மேக்கப்புக்காகவும், தங்களது அழகை சீரமைத்துக் கொள்வதற்கும் மக்கள் பெருமளவில் செலவு செய்கிறார்களாம். காஸ்மெட்டிக் அறுவைச் சிகிச்சையும் கூட இந்த நாடுகளில் அதிகம் செய்கிறார்களாம். இந்த விஷயத்தில் டாப்பில் உள்ள 5 நாடுகள் பற்றிப் பார்ப்போம். வாங்க!


தென் கொரியா


தென்கொரியாதான் இந்த நாடுகளில் முதலிடத்தில் உள்ளது. இந்த நாட்டின் பேஷன் துறை மிகப் பெரிய  அளவில்உள்ளதாம். உலக அளவில் பிளாஸ்டிக் சர்ஜன்கள் அதிகம் உள்ள நாடுகளில் தென் கொரியா 5வது இடத்தில் உள்ளது. கொரியர்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள்.  சாதாரண மேக்கப் முதல் மிகப் பெரியசெலவு செய்து மேக்கப் போடுவது வரை மிகவும் ஆர்வம்காட்டக் கூடியவர்கள். இங்கு உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும் Liposuction, eyelid procedures மற்றும் மூக்கை சரி செய்யும் அறுவைச் சிகிச்சைக்காக பலரும் கொரியாவுக்கு வருகிறார்களாம்.


அமெரிக்கா


பியூட்டிஷன்கள் அதிகம் உள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவில் நடைபெற்ற காஸ்மெட்டிக் அறுவைச் சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சை அல்லாத அழகியல் நடைமுறைகள் 44 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளதாம். அமெரிக்காவின் பியூட்டிஷியன் மார்க்கெட் மிகப் பெரியதாகும்.


ஐக்கிய அரபு எமிரேட்ஸ்


அழகியலை ஆராதிக்கும் இன்னொரு நாடு ஐக்கிய அரபு நாடுகள். இங்கு உடற்பயிற்சிக் கூடங்கள், ஸ்பாக்கள், அழகு நிலையங்கள் அதிகம்.  இங்குள்ள பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜி செய்து தங்களை அழகாக்கிக் கொள்வதிலும் தயக்கம் காட்டாதவர்கள்.  உலகப் புகழ் பெற்ற அழகுப் பெண்களைப் போல மாறுவதற்காக அறுவைச் சிகிச்சை செய்பவர்கள் இங்கு அதிகம் உள்ளனர். மத்திய கிழக்கின் பெவர்லி ஹில்ஸ் என்றும் இதற்கு செல்லப் பெயர் உண்டு.


பிரேசில்




பின்னழகு ஆபரேஷனுக்குப் பெயர் போனது பிரேசில். பின்னழகை பிரமிக்க வைக்கும் பல்வேறு ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்கள் இங்கு உள்ளனவாம். எனவே பின்னகை சரி செய்ய பலரும் இங்கு வருகின்றனராம். பிரேசில் பெண்களுக்கு பின்னழகு பெரிதாகவும், இடுப்பு கச்சிதமாகவும் இருந்தால்தான் பிடிக்கும்.  இங்கு ஆண்டுக்கு 20 லட்சம் காஸ்மெட்டிக் அழகுச் சிகிச்சை நடைபெறுகிறாம். இதில் பெரும்பாலானவை பின்னழகு ஆபரேஷனாம். அதேபோல முன்னழகை பெரிதாக்கும் ஆபரேஷனும்  இங்கு அதிகம் நடக்கிறதாம்.


இத்தாலி


முகச்சீரமைப்புக்குப் பெயர் போனது இத்தாலி. அதேபோல லிப்போசக்ஷன் எனபப்டும் கொழுப்பை உறிஞ்சும் அறுவைச் சிகிச்சையும் இங்கு பிரபலம். இத்தாலியர்கள் பெரும்பாலும் மெல்லிசாக இருப்பார்கள். நன்றாக உடை உடுத்தி, அழகாக காட்சி தருவார்கள். அழகுக்கு முக்கியத்துவம் தருவது அவர்களது வழக்கம். கலை, கலாச்சாரம், பெண்கள் என அனைத்துமே இத்தாலியில் பெஸ்ட்டாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


சமீபத்திய செய்திகள்

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்