Super News: 6 மாதத்தில் ரெடியாகி விடும்.. கிளாம்பாக்கம் ரயில் நிலையம்.. ரயில்வே தகவல்!

Feb 01, 2024,06:14 PM IST

சென்னை: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அடுத்த 6 மாத காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே மகிழ்ச்சிச் செய்தியை அறிவித்துள்ளது.


சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள  புதிய கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கடந்த டிசம்பர் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நவீன வசதிகளுடன் 88 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மு. க. ஸ்டாலின்  திறந்து வைத்தார். 


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, செங்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி , அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.




அரசுப் பேருந்துகள் மட்டுமல்லாமல், ஆம்னி பேருந்துகளுக்கும் இங்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து நகருக்குள் செல்லவும், நகரிலிருந்து இங்கே வரவும் வசதியாக உள்ளூர்ப் பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் புறநகர் பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி 30ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 


இந்நிலையில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் இல்லாமல் இருப்பதாக பயணிகள் தெரிவித்து வந்த நிலையில், பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளிலும் விரைவில் செய்து தரப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார்.


தற்போது கிளாம்பாக்கம் பஸ் நிலையப் பயன்பாட்டை மேலும் சொகுசாக்கும் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தின் மையப் பகுதியிலிருந்து புதிதாக அமைக்கப்படும் ரயில் நிலையம் வரை நடை பாதை அமைக்கப்படவுள்ளது. அதேபோல  கிளாம்பாக்கம் ரயில் நிலையப்  பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.


ரயில் நிலையப் பணிகளுக்காக சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் முதற்கட்டமாக 20 கோடி ரூபாய் வழங்கியது. அதனை தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன.  இந்தாண்டு இறுதிக்குள் இப்பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என ரயில்வே வாரியத்திற்கு சிஎம்டிஏ கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அடுத்த 6 மாதத்தில் கட்டிமுடிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.


அதேபோல கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் நிலைய விரிவாக்கமும் உள்ளது. அந்தப் பணிகளும் தொடங்கி முடிவடைந்தால் அடுத்த சில ஆண்டுகளில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தனது நோக்கத்தில் 100 சதவீத வெற்றியை எட்டி விடும் என்று தெரிகிறது. குறிப்பாக கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமலுக்கு வந்து விட்டால் தற்போது நிலவும் பிரச்சினைகளில் முக்கால்வாசி தீர்வதற்கு வாய்ப்புள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்