சென்னையில்.. கோலாகலமாக தொடங்கியது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டி!

Jan 19, 2024,07:11 PM IST

சென்னை: கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டி தொடக்க விழா இன்று மாலை கோலாகலமாக நடந்தேறியது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.


6வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டி தொடக்க விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது.  கலை நிகழ்ச்சிகளுடன் இந்த விழா நடைபெற்றது.


தேசிய கீதம் இசைக்கப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து பாடி விழா தொடங்கியது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி,  முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல். முருகன், நிஷித் பிரமானிக், தமிழ்நாடு விளையாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.




கேலோ இந்தியா போட்டி இன்று முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஆகிய நகரங்களில் நடத்தப்பட உள்ளன. இதில் தடகளம், ஜிம்னாஸ்டிக், குத்து சண்டை, உள்ளிட்டு 27 வகையான போட்டிகள் நடைபெறும். 


இந்த போட்டியில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் இருந்து 6000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். நாடு முழுவது முழுவதும் 1600 பயிற்சியாளர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.




30 ஆண்டுகளுக்குப் பின்பு சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சமாக ஓடுதளம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சிவப்பு நிறமுடைய செங்கல் ஓடுதளம் அகற்றப்பட்டு, தற்போது நீல நிற ஓடுதளம் (Blue Track) அமைக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே ஆந்திராவில் உள்ள ஆச்சாரியா நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் நீல நிற ஓடுதளம் உள்ளது. தற்போது சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நீல நிறம் ஓடுதளம் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே நீலநிற ஓடுதளத்தை பெற்ற இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.




இந்தப் போட்டியை காண விரும்புவோர் TNSPORTS என்ற செயலியை பதிவிறக்கம் செய்யலாம் அல்லது www.sdat.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து, போட்டிக்கான பதிவு டோக்கன்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


டிடி தமிழ் சானல் தொடங்கி வைத்தார் பிரதமர்


இதே நிகழ்ச்சியில் டிடி பொதிகை சானலின் பெயர் டிடி தமிழ் என்று மாற்றப்பட்டுள்ளது. ரூ. 40 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த சானலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

சமீபத்திய செய்திகள்

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

news

தமிழாசிரியர் பணி.. இந்தி, சமஸ்கிருதம் எப்படி விரும்பத்தக்க தகுதியாக முடியும்?... சு.வெங்கடேசன்

news

என்னா சேட்டை பாருங்க.. சத்துணவு முட்டையை வைத்து ஆம்லேட் போட்ட திருச்சி ஹோட்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்