Khel Ratna Awards 2025.. டி. குகேஷ், மனு பாக்கர் உள்ளிட்ட 4 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

Jan 02, 2025,06:46 PM IST

டெல்லி: உலக செஸ் சாம்பியன் டி. குகேஷ், ஒலிம்பிக் போட்டியில் இரண்டு வெண்கலம் வென்ற மனு பாக்கர் உள்ளிட்ட நான்கு பேருக்கு கேல் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.


விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் மத்திய அரசு கேல் ரத்னா விருது வழங்கி கெளரவித்து வருகிறது. இது விளையாட்டுத்துறையில் உயரிய விருதாகும். 1991ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவாக ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்த இந்த விருது, 2021ம் ஆண்டு முதல் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.


இந்தி மொழியில் கேல் ரத்னா என்பது விளையாட்டில் ரத்தினக்கல் போன்றவர்கள் என்பதாகும்.  இவ்விருதில் பதக்கம், அங்கீகார சுருள் மற்றும் பரிசுத்தொகை ஆகியவை  வழங்கப்பட்டு வருகிறது. விளையாட்டு துறையில் உயரிய விருதான இந்த விருதிற்காக ஒவ்வொரு விளையாட்டு சங்கம் மற்றும் கூட்டமைப்பு வீரர்களை பரிந்துறை செய்யும். அதன்படி, இந்தாண்டிற்கான கேல் ரத்னா விருதிற்காக பலர் பரிந்துரை செய்யப்பட்டனர். தற்போது விருது பெறுபவர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.




* உலக செஸ் சாம்பியன் டி. குகேஷ்

* ஹாக்கி வீராங்கனை ஹர்மன்ப்ரீத் சிங்

* பாரா தடகள வீரர் பிரவீன் குமார்

* ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இரண்டு பதக்கம் வென்ற மனு பாக்கர்


ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வரும் 17ம் தேதி காலை 11 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்க உள்ளார்.


அர்ஜூனா விருது


இதேபோல 32 வீரர்கள் வீராங்கனைகள் மற்றும் 17 பாரா விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருதையும் மத்திய 

அரசு அறிவித்துள்ளது.


அர்ஜூனா விருது பெறுவோர் பட்டியல் வருமாறு:


ஜோதி யர்ராஜி, அன்னு ராணி, நீத்து, சவீட்டி, வந்திகா அகர்வால், சலிமா டெட்டே, அபிஷேக், சஞ்சய், ஜர்மன்ப்ரீத் சிங், சுக்ஜீத் சிங்,  ராகேஷ் குமார், ப்ரீத்தி பால், ஜீவன்ஜி தீப்தி, அஜீத் சிங், சச்சின் சர்ஜேராவ் கிலாரி, தரம்பீர், பிரணவ் சூர்மா, ஹோகடோ சேமா,  சிம்ரன், நவதீப், நிதேஷ் குமார், துளசிமதி முருகேசன், நித்யா ஸ்ரீசுமதி சிவன், மனீஷா ராமதாஸ், கபில் பார்மர், மோனா அகர்வால், ரூபினா பிரான்சிஸ், ஸ்வப்னில் சுரேஷ் குசாலே, சரப்ஜித் சிங், அபய் சிங், சஜன் பிரகாஷ், அமன்


வாழ்நாள் சாதனைக்கான அர்ஜூனா விருது


சுச்சா சிங் , முரளிகாந்த் ராஜாராம் பெட்கர்


துரோணாச்சாரியா விருது (பயிற்சியாளர்களுக்கான விருது)


சுபாஷ் ராணா, தீபாலி தேஷ்பாண்டே, சந்தீப் சங்வான்


வாழ்நாள் சாதனை விருது


எஸ் முரளிதரன், அர்மாண்டோ அக்னலோ கொலாகோ



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பொங்கல் பண்டிகைக்கு 6 நாட்கள் அரசு விடுமுறை... ஜனவரி 17ம் தேதி லீவு.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு

news

ஃபெங்கல் புயல் தீவிர பேரிடர்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு.. கெஜட்டிலும் அறிவிக்கை வெளியானது

news

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி: 4 லட்சம் நிவாரணம் அறிவித்த தமிழக அரசு

news

அஜித் மகள் பிறந்தநாள்...க்யூட்டான குடும்ப போட்டோக்களை பகிர்ந்த ஷாலினி

news

யார் அந்த சார்?...கனிமொழி சொன்ன பதில்...இதை நாங்க எதிர்பார்க்கவே இல்லையே

news

சபரிமலையில் குவியும் காணிக்கை...41 நாளில் வருமானம் எவ்வளவு தெரியுமா?

news

மதுரை திருமங்கலத்தில் 1000 கிலோ கறி, 2500 கிலோ அரிசி..ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் கறி விருந்து

news

ஜல்லிக்கட்டுக்கு போன இடத்தில் மல்லுக்கட்டு...புதுக்கோட்டையில் நடந்த பரபரப்பு

news

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா?....சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவும் துவங்கிடுச்சு

அதிகம் பார்க்கும் செய்திகள்