"Thug Life"... "என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன்".. மிரள வைக்கும் கமல்ஹாசனின் பர்ஸ்ட் லுக்!

Nov 06, 2023,06:35 PM IST

சென்னை: கமல்ஹாசன் - மணிரத்தினம் 2வது முறையாக இணையும் புதிய படத்திற்கு தக் லைப் என்று பெயர் வைத்துள்ளனர். இதுதொடர்பாக வெளியாகியுள்ள பர்ஸ்ட் லுக் டீசர் படு மிரட்டலாக உள்ளது.


கமல்ஹாசன் அதிரடியான கேங்ஸ்டராக படத்தில் வருகிறார்.. அதை விட முக்கியமாக அவரது அட்டகாசமான ஸ்டண்ட் சீக்வன்ஸ் கலக்கலாக வந்துள்ளது. இதுவே இப்படி என்றால் முழுப் படமும் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.




நாயகன் படம்தான் கமல்ஹாசன் - மணிரத்தினம் கை கோர்த்த முதல் படம். இந்தப் படம் ஏகப்பட்ட விருதுகளையும், பாராட்டுக்களையும் அள்ளியது. இது தமிழில் ஒரு டிரெண்ட் செட்டர் படமும் கூட. நாயகன் படத்தைத் தழுவி அல்லது அதையொட்டித்தான் பெரும்பாலான கேங்ஸ்டர் படங்கள் வந்துள்ளன.


இந்த நிலையில் பல காலத்திற்குப் பிறகு மீண்டும் மணிரத்தினத்துடன் கை கோர்த்துள்ளார் கமல்ஹாசன். இந்த முறையும் மிரட்டலான கதையில்தான் கமல்ஹாசன் நடிக்கப் போகிறார். இதை இன்று மாலை வெளியான டீசர் கம் பர்ஸ்ட் லுக் கம்  டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளிப்படுத்தியுள்ளது.




படத்திற்கு தக் லைப் என்று பெயரிட்டுள்ளனர். படத்தில் கமல் அட்டகாசமான வசம் பேசியுள்ளார்.. கேட்கவே கூஸ்பம்ப்ஸ் ஆகிறது.. 


"என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன். காயல்பட்டனத்துக்காரன்.. பொறக்கும்போதே எழுதி வச்சுட்டாவ.. சக்திவேல் நாயக்கன் கிரிமினல், குண்டா, யாக்கூஸா.. யாக்கூஸான்னா ஜப்பான் மொழில கேங்ஸ்டர்னு.. சொல்வாவ..  காலன் என்னைத் தேடி வந்தது இது முதல் முறையில்லை..  கடைசி முறையும் இல்லை.. என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன்.. ஞாபகத்துல வச்சுக்கங்க" என்று பேசி முடிக்கும் அந்த வசனமே படம் குறித்த பிரமிப்பையும், பிரமாண்ட எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துவதாக உள்ளது.




படம் முழுக்க கிராபிக்ஸுக்கு ஏகப்பட்ட வேலை இருக்கும் போலத் தெரிகிறது.. கூடவே கமல்ஹாசனின் கனவு ஹீரோவான மருதநாயகத்தையும் நினைவூட்டுகிறது அவரது மீசை ஸ்டைலும், உருவத் தோற்றமும்.. ஒரு  வேளை  மருதநாயகத்துக்கான முன்னோட்ட படமாக கூட இது அமையலாம்.. யார் கண்டது!


கமல்ஹாசனுடன் ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான் உள்ளிட்டோரும் படத்தில் இணைந்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கின்றனர்.


மொத்த டைட்டில் வீடியோவும் பெரும் வைரலாகியுள்ளது.. ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கமல்ஹாசனுக்கு சரியான பர்த்டே ட்ரீட்டைக் கொடுத்துள்ளார் மணிரத்தினம்.

சமீபத்திய செய்திகள்

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்

news

தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா‌..?

news

மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு

news

சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி

news

பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

news

அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

news

அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்