திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து தொட்டிப்பாலம் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் பயணித்த பெண்ணுக்கு மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே பஸ்ஸிலேயே பிரசவம் ஏற்பட்டு அழகான பெண் குழந்தை பிறந்தது.
முன்னதாக கர்ப்பிணி ஜரீனாவுக்கு பிரசவ வலி ஏற்படவே, பஸ் டிரைவர் மின்னல் வேகத்தில் மருத்துவமனைக்கு பஸ்சை விரட்டினா். கிட்டத்தட்ட ஆம்புலன்ஸ் போல மாறியது அந்த பஸ். பஸ் டிரைவரின் சமயோசிதம் மற்றும் வேகம் காரணமாக பஸ் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது. மருத்துவமனை ஊழியர்களும் ஸ்டிரச்சர் உள்ளிட்டவற்றுடன் தயாராக காத்திருந்தனர். இருப்பினும் பஸ் மருத்துவமனைக்குள் வந்து நிற்பதற்குள்ளாகவே அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமாகி பஸ்சிலேயே பிரசவிக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்களும் செவிலியர்களும் பஸ்சுக்குள்ளேயே சென்று பிரசவம் பார்த்தனர்.
ஜரீனாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஓடும் பஸ்சிலேயே பிரசவித்த ஜரீனாவும், அவரது மகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும் தற்போது மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலப்புரம் மாவட்டம் திருநவயா பகுதியைச் சேர்ந்த லிஜேஷ் ஜேக்கப் என்பவரின் மனைவிதான் ஜரீனா. இந்த பஸ்சில் ஜரீனா தனியாக பயணித்துள்ளார். நிறைமா கர்ப்பிணியாக இருந்த அவருக்கு வழியிலேயே பிரசவ வலி ஏற்பட்டதால் பஸ் டிரைவரும் சக பயணிகளும் அவருக்கு ஆறுதலாக இருந்தனர். அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்றியதாலும், உரிய நேரத்தில் பஸ் மருத்துவமனைக்கு வந்து விட்டதாலும் ஜரீனாவுக்கும், குழந்தைக்கும் எந்த ஆபத்தும் இல்லாமல் இருவரும் பத்திரமாக மீண்டுள்ளனர்.
இதுகுறித்து பஸ் கண்டக்டர் அஜயன் கூறுகையில், அந்தப் பெண் நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்காக முன்புற இருக்கையிலேயே சவுகரியமாக ஒதுக்கிக் கொடுத்திருந்தோம். அமலா மருத்துவமனையை பஸ் தாண்டிச் சென்ற நிலையில், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. என்னைக் கூப்பிட்டு தனது கணவரின் செல் நம்பரைக் கொடுத்து அவருக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறினார். ஆனால் அடுத்த சில விநாடிகளில் அவருக்கு வலி அதிகமாகி விட்டது. இதையடுத்து டிரைவரை யு டர்ன் போட்டு அமலா மருத்துவமனைக்கு பஸ்சை திருப்பச் சொன்னேன். அவரும் மின்னல் வேகத்தில் செயல்பட்டு மருத்துவமனைக்குள் பஸ் சென்றது. பஸ் பயணிகளும் நன்றாக ஒத்துழைத்தனர் என்றார்.
மருத்துவமனைக்குள் நுழைவதற்கு சில விநாடிகளுக்கு முன்புதான் ஜரீனாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. இருப்பினும் மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும் தயார் நிலையில் இருந்ததால் பஸ் நின்றதுமே உள்ளை சென்று ஜரீனாவையும், சிசுவையும் பாதுகாப்பாக கொண்டு வந்தனர். பஸ்சில் இருந்த பெண் பயணிகளும் ஜரீனாவுக்கு உறுதுணையாக இருந்து அவர் குழந்தை பெற உதவி செய்துள்ளனர். மின்னல் வேகத்தில் செயல்பட்ட அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து கொண்டுள்ளன.
Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
LIC website.. இது தொழில்நுட்பக் கோளாறில்லை... அரசியல் கோளாறு.. மதுரை எம்.பி சு.வெங்கடேசன்
Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?
மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்
தங்கம் விலை விடாமல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது ஏன்.. நிபுணர்கள் தரும் விளக்கம் இதுதான்!
கிண்டி அரசு மருத்துவமனை டாக்டரைக் கத்தியால் குத்திய விக்னேஷுக்கு.. ஜாமீன் மறுப்பு!
TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!
{{comments.comment}}