கொச்சி: கேரளா, கர்நாடகாவில் அதிகாலை 4 மணிக்கே லியோ படம் ரிலீஸ் செய்யப்படவுள்ளதால் அந்த மாநில விஜய் ரசிகர்கள் செம ஹேப்பியாக உள்ளனர். கேரளாவில் ரசிகர்களின் மகிழ்ச்சியை தியேட்டர்களும் கொண்டாடி வருவதால் அந்த மாநிலமே விழாக்கோலம் பூண்டுள்ளது போல காணப்படுகிறது.
விஜயக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளாவிலும் மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் உண்டு. இன்னும் சொல்லப் போனால் தமிழ்நாட்டையே மிஞ்சும் அளவுக்கு கேரள விஜய் ரசிகர்கள் உண்டு இல்லை என்று கலக்கி விடுவார்கள்.
கேரளாவில் விஜய் படங்கள் வெளியாகும்போதெல்லாம் தியேட்டர்கள் திண்டாடிப் போய் விடும். அந்த அளவுக்கு விஜய்க்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டம் கேரளாவில் உள்ளது. விஜய் ரசிகர்களை வைத்து அங்கு ஒரு படமே கூட வெளியாகி பட்டையைக் கிளப்பிய கதையும் உண்டு.
இந்த நிலையில் எல்லா விஜய் படங்களைப் பலோவே, லியோ படத்தையும் மிகப் பிரமாண்டமாக வரவேற்க அங்குள்ள ரசிகர்கள் தடபுடலாக தயாராகி வருகின்றனர். அவர்களைப் போலவே தியேட்டர்களும் ரெடியாகி வருகின்றன. தமிழ்நாட்டில்தான் அதிகாலைக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. ஆனால் கேரளா, கர்நாடகாவில் அதிகாலை 4 மணிக்கே காட்சிகள் தொடங்கவுள்ளன. இதற்கான அனுமதியும் கொடுக்கப்பட்டு விட்டது. இதனால் ரசிகர்கள் ஹேப்பியாகியுள்ளனர்.
இதுகுறித்த அறிவிப்புகளை கேரள மாநில தியேட்டர்கள் தங்களது டிவிட்டர் பக்கங்களில் போட்டு ரசிகர்களுடன் அதை ஜாலியாக பகிர்ந்து வருகின்றனர். கொச்சியில் உள்ள கவிதாதியேட்டர் போட்டுள்ள ஒரு அறிவிப்பில், "அண்ணா ரெடி.. 4 மணி போஸ்டர் ரெடி" என்று கூறி மகிழச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, கேரளா, கர்நாடகா எல்லைப் புறங்களில் வசிக்கும் விஜய் ரசிகர்கள், அதிகாலைக் காட்சியைப் பார்க்க எல்லை தாண்டிச் செல்லவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் எல்லைப் புறங்களும் கூட பரபரப்பாகவே காணப்படுகிறது. இப்படித்தான் தலைவா படத்தின்போதும் ஏகப்பட்ட பிரச்சினை உருவாகியது. அதேபோல விஸ்வரூபம் படத்துக்கும் கூட பிரச்சினை வந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் லியோவுக்கு ஏகப்பட்ட முட்டுக்கட்டைகள் வந்தபோதும் கூட அக்கம் பக்கத்து மாநிலங்களில் திருவிழாக் கோலத்துடன் தியேட்டர்களும், ரசிகர்களும் காணப்படுவதை சற்று பொறாமையுடன் தமிழ்நாட்டு விஜய் ரசிகர்கள் பார்த்துக் கொண்டுள்ளனர்.
Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!
Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
{{comments.comment}}