எர்ணாகுளம்: நிவின் பாலி மீது ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய வழக்கில், அதற்குப் போதிய ஆதாரம் இல்லை. சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட இடத்தில் நிவின் பாலி இல்லை என்பது நிரூபணமாகியுள்ளதாக கேரள போலீஸ் தரப்பில் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மலையாள சினிமாவில் நிலவி வரும் பாலியல் தொல்லை தொடர்பாக நீதிபதி ஹேமா கமிட்டி விசாரணை நடத்தியது. இந்த விசாரணை அறிக்கையை கேரள அரசிடமும் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையை கேரள அரசு வெளியிட்டபோது நாடு முழுவதும் அது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு திரைப் பிரபலங்கள் மீது புகார்கள் குவிந்தன. இதையடுத்து போலீஸார் பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்தனர்.
இயக்குநர் ரஞ்சித் , நடிகர்கள் முகேஷ், சித்திக் என பல பெயர்கள் அடிபட்டன. இது பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியதன் காரணமாக நடிகர் சங்கமான AMMA தலைவர் மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் AMMA சங்கமும் கூண்டோடு கலைக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் நிவின் பாலி மீது எர்ணாகுளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அந்த புகாரில், நிவின் பாலி தனக்கு பட வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி, துபாயில் வைத்து தன்னை பாலியல் வன் கொடுமைக்கு உட்படுத்தினார் என கூறப்பட்டிருந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் புகாரின் பேரில், நிவின் பாலி மீது கொத்தமங்கலம் போலீஸார் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால் தன் மீதான புகார்கள் பொய்யானவை. நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன் என்று உறுதிபடக் கூறியிருந்தார் நிவின் பாலி. இந்த நிலையில் இந்த புகார்கள் குறித்து விசாரித்து வந்த போலீஸார் தற்போது நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில், நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில் சம்பவம் நடந்ததாக கூறப்படும் 2023ம் ஆண்டு டிசம்பர் 14 ,15 ஆகிய தேதிகளில் நிவின் பாலி துபாயில் இல்லை. அந்த தேதிகளில் கேரளாவில் தான் இருந்தார் என்பது தெரியவந்துள்ளது.
அவரது பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பரிசோதித்ததில் இது தெரிய வந்தது. அவருக்கு எதிரான புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே நிவின் பாலி மீதான புகார்கள் பொய்யானவை என்று தெரிய வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நிவின் பாலிக்கு பெரிய நிம்மதி கிடைத்துள்ளது. இந்த அறிக்கைக்கு நடிகர் நிவின் பாலி நன்றி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}