Venjaramoodu Mass murder: மாமா, அத்தை, தம்பி, காதலி, பாட்டி.. 5 பேரை கொன்ற சைக்கோ இளைஞர்!

Feb 25, 2025,06:30 PM IST

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வெஞ்சரமூடு அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை அடுத்தடுத்துக் கொலை செய்து மாநிலத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார் 23 வயதேயான இளைஞர்.


திருவனந்தபுரம் அருகே உள்ளது வெஞ்சரமூடு என்ற பகுதி. இதற்கு 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடம்தான் பெருமலா. இந்தப் பகுதியைச் சேர்ந்த 23 வயதான அபான் என்ற இளைஞர் காவல் நிலையத்திற்கு ஒரு ஆட்டோவில் வந்தார். நீட்டாக டிரஸ் அணிந்திருந்த படு கூலாக காணப்பட்ட அபான், அங்குள்ள காவலரிடம், நான் 3 பேரைக் கொலை செய்து விட்டேன் என்று கூறி ஏராளமான சாவிகள் அடங்கிய சாவிக் கொத்தையும் டேபிளில் வைத்தார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவலர், அந்த இளைஞரை அமர வைத்து என்ன சொல்கிறாய் என்று விசாரித்துள்ளார். அதன் பிறகு அபான் சொல்ச் சொல்ல அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார் காவலர். அவர் மட்டுமல்ல மொத்தக் காவல் நிலையமும் ஆடிப் போய் விட்டது.  


இதையடுத்து அந்த நபர் சொன்ன வீட்டுக்கு விரைந்தனர் போலீஸார்.  கதவை உடைத்து உள்ளே போய்ப் பார்த்தபோது, அபானின் தாயார் ஷெமி பாத்ரூமில் ரத்த வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தார். தம்பி அப்சான் டிராயிங் ரூமிலும், அபானின் காதலி பர்சானா மாடியிலும் பிணமாகக் கிடந்தனர். இதில் ஷெமி மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  2 பேருமே மிகக் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டிருந்தனர்.  இதையடுத்து அபானிடம் என்ன நடந்தது என்று கேட்டபோது வேறு எதையும் கூறாமல்,  நான் விஷம் குடித்துள்ளேன் என்று மட்டும் கூறியுள்ளார் அபான். இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த போலீஸார் அவரை திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று அனுமதித்தனர்.




தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், அனைவரையும் அபான் சுத்தியலால் அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது. விசாரணையின்போதுதான் மேலும் 3 பேரை அபான் அடித்துக் கொன்றது தெரிய வந்தது. அதாவது மொத்தம் 5 பேரைக் கொலை செய்துள்ளார் அபான்.  அவரது பாட்டி சல்மா பீவியை பாங்கோடு பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து அடித்துக் கொன்றுள்ளார்.  இவரைத்தான் முதலில் அபான் கொலை செய்துள்ளார்.  அதன் பின்னர் எஸ்.என்.புரத்தில் உள்ள தனது தாய்மாமா லத்தீப் வீட்டுக்குப் போயுள்ளார். அங்கு வைத்து லத்தீபையும், அவரது மனைவி ஷாஹிதாவையும் சரமாரியாக சுத்தியலால் அடித்துக் கொன்றுள்ளார். இருவருமே சம்பவ இடத்திலேயே இறந்து போய் விட்டார்கள். அதன் பிறகுதான் பெருமலாவில் உள்ள தனது வீட்டுக்கு வந்து தாய், தம்பி, காதலியை அடித்துத் தாக்கியுள்ளார்.


மொத்தக் கொலைகளையும் 2 மணி நேரத்தில் நடத்தி முடித்துள்ளார். 3 வீடுகளுக்கும் டூவீலரிலேயே போயுள்ளார். மெயின் ரோடுகளில் டிராபிக்காக இருந்ததால் சந்து பொந்துகளுக்குள் புகுந்து புகுந்து ஒவ்வொரு வீடாக இவர் போனதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  எல்லாக் கொலைகளையும் செய்த பின்னர் எலி மருந்தை குடித்து விட்டு பிறகுதான் காவல் நிலையம் வந்து இதையெல்லாம் சொல்லியுள்ளார்.


எதற்காக இந்த கொலைகள் நடந்தன என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. அபானின் தந்தை வளைகுடாவில் பணியாற்றி வருகிறார். கொரோனா பாதிப்பு வருவதற்கு முன்பு வரை இந்தக் குடும்பம் நல்ல பொருளாதார நிலையில் இருந்துள்ளது. கொரோனாவுக்குப் பிறகு கடன் தொல்லையில் மூழ்கியதாக தெரிகிறது. அதுதொடர்பாக அபான் கொலை செய்தாரா அல்லது வேறு காரணமா என்பது தெரியவில்லை.


கேரளாவை இந்தத் தொடர் கொலைகள் அதிர வைத்துள்ளன. போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அபானின் தாயார் உடல் நலம் தேறி நினைவு திரும்பினால்தான் கொலைகளுக்கான காரணம் குறித்துத் தெரிய வரும். ஆனால் அவர் தொடர்ந்து அபாய கட்டத்திலேயே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஜய்யின் 3வது மேடைப் பேச்சு... என்னாவா இருக்கும்?.. ஆர்வத்தில் மக்கள்

news

தொகுதி மறுசீரமைப்பால் ஆபத்து.. மார்ச் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

100 ஆண்டுகளில் இந்தியாவில் தங்கத்தின் விலை.. நம்ம அப்பத்தாக்கள் கொடுத்து வைத்தவர்கள்!

news

குடையோடு போங்க மக்களே.. தமிழ்நாட்டில் பிப் 27,28 மார்ச் 1.. ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..!

news

Venjaramoodu Mass murder: மாமா, அத்தை, தம்பி, காதலி, பாட்டி.. 5 பேரை கொன்ற சைக்கோ இளைஞர்!

news

மத்திய அரசிடம் ஈகோ பார்க்கிறது மாநில அரசு: பாஜக மூத்த தலைவர் தமிழிசை

news

தமிழ்நாடு முழுவதும் ஹிந்தி திணிப்புக்கு எதிராக.. மத்திய அரசை கண்டித்து திமுக மாணவர் அணி போராட்டம்!

news

உங்களுக்கு பிபி இருக்கா.. ரொம்ப டென்ஷனா இருக்கா?.. அப்படீன்னா இதையெல்லாம் மறக்காம பண்ணுங்க!

news

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு.. இனி மக்கள் சேவையில் என் புதிய பாதையில் புதிய பயணம்..ரஞ்சனா நாச்சியார்

அதிகம் பார்க்கும் செய்திகள்