அடூர், கேரளா: கேரள மாநிலம் அடூர் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன குருப் என்பவர் பத்தனம்திட்டா கோர்ட்டில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். இது கேரளாவையும் தாண்டி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ண குருப். முதியவர். இவர்தான் கோர்ட்டுக்கு வந்து நூதன வழக்கைப் போட்டவர். பத்தனம் திட்டா கோர்ட்டில் ராதாகிருஷ்ண குருப் தாக்கல் செய்த மனுவில், எனது பக்கத்து வீட்டில் அனில்குமார் என்பவர் வசிக்கிறார். அவர் கோழி, சேவல் வளர்க்கிறார். அவரது வீட்டு சேவல் அதிகாலையிலேயே கூவ ஆரம்பித்து விடுகிறது.
விடாமல் அது கூவுவதால் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. அதிகாலை 3 மணிக்கே என்னை கூவி எழுப்பி விட்டு விடுகிறது. இதனால் எனது தூக்கம் கெட்டு பெரும் சிரமத்துக்குள்ளாகிறேன். அனில் குமாரிடம் இதுகுறித்துப் புகார் கூறியும் அவர் நடவடிக்கை எடுக்கவில்ல. இதுகுறித்து அதிகாரிகளுக்கு உரிய உத்தரவிட்டு அந்த சேவலை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்தப் புகாரை விசாரித்த கோர்ட், மாவட்ட வருவாய் அதிகாரி இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து ஆர்டிஓ அதிகாரிகள் உடனடியாக விசாரணையில் இறங்கினர். நேரடியாக அனில் குமார் வீட்டுக்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது அனில் குமார் தனது சேவல், கோழிகளை வீட்டின் மொட்டை மாடியில் விட்டிருப்பது தெரிய வந்தது. அதில் உள்ள ஒரு சேவல்தான் குருப்பின் தூக்கத்தைக் கெடுப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து அனில்குமாரையும், ராதாகிருஷ்ண குருப்பையும் உட்கார வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது சம்பந்தப்பட்ட சேவலை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அனில் குமாருக்கு உத்தரவிடப்பட்டது. அதாவது மொட்டை மாடியில் அந்த சேவலை வைக்காமல், வீட்டின் தென் பகுதியில் உள்ள இடத்திற்கு மாற்ற அனில் குமாருக்கு உத்தரவிடப்பட்டது. சேவலை இப்படி இடமாற்றம் செய்ய அவருக்கு 14 நாட்கள் அவகாசமும் அளிக்கப்ப்டுள்ளது.
சேவல் இடம் மாறிய பிறகாவது ராதாகிருஷ்ணன் குருப்பு நிம்மதியாக தூங்கட்டும்!
தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!
சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!
Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?
என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!
{{comments.comment}}