சபரிமலை : உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் புனிதமான 18 படிகள் மீது நின்று போலீசார் போட்டோஷூட் நடத்திய விவகாரம் பெரும் சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக கேரள மாநில உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற செயல்களை ஏற்க முடியாது என்று கோர்ட் கண்டித்துள்ளது.
தற்போது இந்த போலீஸார் அனைவரும் கூண்டோடு வேறு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நன்னடத்தை பயிற்சி தர உத்தரவிடப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 18 படிகள் மீது தான் சுவாமி ஐயப்பனின் சன்னதி அமைந்துள்ளது. இந்த 10 படியை அனைவராலும் ஏற முடியாது. மாலை அணிந்து, இருமுடி சுமந்து வரும் பக்தர்கள் மட்டுமே இந்த 18ம் படி ஏற அனுமதிக்கப்படுவார்கள். மற்றபடி கடுமையாக 41 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை வந்தாலும் கூட, மாலை அணியாமலும், இருமுடி இல்லாமலும் வரும் எவரையும் 18 ஏற அனுமதி கிடையாது என்ற கட்டுப்பாடு சபரிமலையில் பல காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சபரிமலையின் 18 படிகளிலுக்கும் பலவிதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. சத்தியமான பொன்னு 18ம் படி என பக்தர்களால் கொண்டாடப்படும் இந்த படிகளை ஏறி சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்பவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்றம் என்பது ஏற்படும். 18 படி ஏறி செல்லும் எந்த ஒரு மனிதனாலும் தெய்வ நிலையை அடைய முடியும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே இந்த படிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இப்படி பக்தர்களால் பலவிதங்களிலும் புனிதமான இடமாக போற்றப்படும் 18 படிகளில் நின்று, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போட்டோஷூட் நடத்தி உள்ளனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலானதை அடுத்து சன்னிதானம் சிறப்பு அதிகாரி பைஜூவிடம் விளக்கம் அளிக்கும் படி ஏடிஜிபி உத்தரவிட்டார். போலீசாரின் இந்த செலுக்கு கேரள விஷ்வ இந்து பரிஷித் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கேரள கோவில் பாதுகாப்பு கமிட்டி சார்பிலும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஹைகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தவறான செயல். போலீஸார் வேண்டும் என்றே செய்திருக்காவிட்டாலும் கூட இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஏற்றுக் கொள்ள முடியாதது என்று கூறி கண்டித்துள்ளது. இதையடுத்து போட்டோஷூட்டில் ஈடுபட்ட 23 பேரும் தற்போது கண்ணூர் நன்னடத்தை பயிற்சி வகுப்புக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதில் திருவனந்தபுரத்திலிருந்து வேறு போலீஸார் சபரிமலைப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
முன்னதாக சபரிமலை ஐயப்பன் கோவில் இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டது. முதல் நாள் துவங்கி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. சபரிமலை சீசன் துவங்கிய முதல் 9 நாட்களிலேயே 6.15 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. பக்தர்கள் கூட்டம் கடந்த ஆண்டை விட அதிகமாக இருப்பதால் கோவில் வருமானமும் முதல் 9 நாட்களிலேயே மூன்று மடங்கு அதிகரித்து ரூ.41.3 கோடி வரை வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சபரிமலையில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் போலீசார் 18 படியில் நின்று போட்டோஷூட் நடத்திய விவகாரம் பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
6 மாவட்டங்களில் அதி கன மழை.. 4 மாவட்டங்களில் மிக கன மழை.. நாளை.. வானிலை மையம் தகவல்
மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஐசியு.,வில் அனுமதி.. தீவிர சிகிச்சை
Cyclone Memes: "நான்லாம் வந்தேன்னு வை.. புதுச்சேரியை இப்படி ஒரு புரட்டு..சென்னையை அப்படி ஒரு புரட்டு
ஆழ்ந்த காற்றழுத்தம் எப்போது புயலாக மாறும்.. டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தரும் விளக்கம் இதுதான்!
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலை இல்லை:.. அமைச்சர் பி.கே. சேகர்பாபு
Drumsticks: கிடுகிடு வென உயர்ந்து வரும் முருங்கை விலை.. கிலோ ரூ.100.. எப்படி சாம்பார் வைக்கிறது!
புயல் சின்னம் எதிரொலி.. சென்னையில் 29ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை கன மழை பெய்யும்.. பிரதீப் ஜான்
பிரியங்கா காந்தி எனும் நான்.. அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தியபடி பதவியேற்றார் பிரியங்கா காந்தி
மெல்ல நகர்ந்து வரும் புயல் சின்னம்.. நாளை மறுநாள் தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட்
{{comments.comment}}