திருவனந்தபுரம்: கேரளாவில் நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது கேரள அரசு. இந்த அறிவிப்பால் அங்குள்ள விஜய் ரசிகர்கள் ஏகோபித்த மகிழ்ச்சியில் திகைத்துள்ளனர்.
விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் தான் தி கோட். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற பெயரின் சுருக்கம் தான் தி கோட். இப்படத்தில் அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கபட்டுள்ளதால் படம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. அது மட்டும் இன்றி விஜய் விரைவில் நடிப்பை முடித்துக் கொண்டு, முழு நேர அரசியலில் குதிக்க இருப்பதால், விஜய் ரசிகர்கள் விஜய் படங்களில் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இது விஜய்யின் 68வது திரைப்படமாகும். இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம், மீனாட்சி செளத்ரி, யோகி பாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வெங்கட்பிரபு, விஜய் இணையும் முதல் படம் இது. இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். விஜய்யுடன் நடிகை திரிஷாவும் இணைந்து நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வர உள்ளது.
தி கோட் படத்தின் இறுதிக்காட்சிகள் கேரளாவில் தான் படமாக்கப்பட்டன. அப்போது கேரளா வந்த விஜய்க்கு கேளராவில் உள்ள விஜய் ரசிகர்கள் பிரம்மாண்ட அளவில் திரண்டிருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அத்துடன் விஜய் வருகை குறித்து ஆரவாரம் செய்தனர். கிட்டதட்ட 14 ஆண்டுகளுக்கு பின்னர் தி கோட் படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் கேளரா சென்ற போது ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்திருந்தனர். தமிழகத்தைப் போல கேளராவிலும் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம்.
இந்நிலையில், தி கோட் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்திற்கு அதிகாலை நடைபெறும் சிறப்பு காட்சிக்கு கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியால் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் திகைத்துள்ளனர். தமிழகத்தில் அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதால், தமிழகத்தில் உள்ள விஜய் ரசிகர்களும் கேரளாவிற்கு படையெடுக்க முடிவு செய்துள்ளதாக தீவிர விஜய் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!
தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}