டீக்கடையில் தர்ணாவில் ஈடுபட்ட கேரள கவர்னர்... Z plus பாதுகாப்பிற்கு உத்தரவிட்ட மத்திய அரசு

Jan 27, 2024,06:49 PM IST

திருவனந்தபுரம்:  சாலையோரம் இருந்த டீக்கடையில்  அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் செயலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கேரள கவர்னர் மற்றும் கேரள கவர்னர் மாளிகைக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


கேரளா கவர்னராக இருப்பவர் ஆரிப் முகம்மது கான். இவருக்கும், அம்மாநில அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் அம்மாநில அரசு  ஆரிப் முகமது கானுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கு இன்றும் நிலுவையில் தான் உள்ளது. சமீபத்தில் சட்டசபை கூட்டத்தொடர் துவங்கிய போது கவர்னர் உரையை முழுமையாக வாசிக்காமல், கடைசி பகுதியை மட்டும் வாசித்து ஆரிப் முகமது கான் வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதைப்போன்று நேற்று நடந்த குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் நடத்திய தேநீ்ர் விருந்து நிகழ்ச்சியிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.




இந்நிலையில், கொல்லம் மாவட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆரிப் முகமது கான் சென்றார். அவர் செல்லும் வழியில் நிலமேல் என்ற இடத்தில், கவர்னரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுங் கட்சியின் ஆதரவு பெற்ற மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வாகனம் அருகே செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். காரில் இருந்து கீழே இறங்கி ஆரிப் முகமது கான் போலீசாரிடம்  அடுத்தடுத்த கேள்விகளை எழுப்பினார். மாணவர் சங்கத்தினரை தடுக்காமல் போலீஸார் அனுமதித்தது ஏன் என கேள்வி  எழுப்பினார். பிறகு போராட்டம் நடத்தியவர்களை நோக்கிச் சென்று அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஆளுநர்.


இருப்பினும் கோபம் குறையாத கவர்னர் அருகில் இருந்த டீக்கடை முன்னர்  சேர் போட்டு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்தார். இதனால் செய்வது அறியாது தவித்த போலீசார் அவரை சமாதானப்படுத்த முயன்று 12 மாணவர்களை கைது செய்வதாக தெரிவித்தனர். இதனை ஏற்காத கவர்னர் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரின்  மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். ஆரிப் முகமது கானின் இந்தச்செயலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


இதனையடுத்து கவர்னர் ஆரிப் முகமது கான் மற்றும் கேரள ராஜ்பவனிற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த பாதுகாப்பு ஆளுநருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது அது நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கேரளா கவர்னர் மாளிகை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்