சென்னை: பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம். மத்திய அரசு மாநிலங்களுடன் அர்த்தமுள்ள உரையாடலை தொடங்க வேண்டும். தொகுதி மறுசீரைமப்பு குறித்து தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடைம என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரைமப்பு கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசுகையில், பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம். மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தாமல் மறுசீரமைப்பை பாஜக அரசு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வந்துள்ளது.
அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றாமல் திடீரென தொகுதி மறு சீரமைப்பு மேற்கொள்ள பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு செய்தால் வட மாநிலங்களுக்கு தொகுதிகள் கணிசமாக அதிகரிக்கும். வடமாநிலங்களுக்கு தொகுதிகள் அதிகரிக்கும் அதே நேரத்தில் தென் மாநிலங்களின் தொகுதிகள் கணிசமாக குறையும். குறுகிய அரசியல் லாபத்திற்காக தொகுதி மறு சீரமைப்பை பயன்படுத்த பார்க்கிறது பாஜக அரசு.
மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் தொகுதி மறு வரையறை என்பது மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு தண்டனையாகும். தற்போதைய தொகுதி மறுசீரமைப்பு என்பது தென் மாநிலங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகவே அமையும். எண்ணிக்கை மட்டுமல்ல. இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம். தென் மாநிலங்களின் எண்ணிக்கை குறைவது பாஜகவின் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும்.
தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக மாநிலங்களுடன் ஒன்றிய அரசு ஆலோசிக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு குறித்து தெளிவுபடுத்த வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. மாநிலங்களுடன் ஆலேசித்து ஒருமித்த கருத்து எட்டப்பட்ட பிறகே தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும் என தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியுள்ளார்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தி, சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனை தான் தொகுதி மறுவரையறை. இதற்காக கட்சி வேறுபாடுகளை களைந்து போராடுவோம். பாஜக நம்மை பேசவே அனுமதிப்பதில்லை. தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக எங்கள் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளேன். நியாயமான தொகுதி வரையறையை வலியுறத்தி அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடத்தப்படும். அனைத்து கட்சிகளும் அதில் கலந்து கொண்டு போராட்டத்தைத் தொடர வேண்டும். கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியுள்ளார்.
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி
மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரைமப்பால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்ற அச்சம் எழுந்துள்ளது. நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் எந்த சூழலிலும் குறையக் கூடாது. தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுத உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பிஜூ ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக்
மக்கள் தொகையை கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றிய மாநிலங்களை தொகுதி மறுசீரைமப்பு என்ற பெயரில் தண்டிக்கக் கூடாது. அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைந்து ஆலோசித்த பிறகே ஒன்றிய அரசு தொகுதி மறுசீரைமப்பை நடத்த வேண்டும் என்று பிஜூ ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
பாரத ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் கே.டி.ராமராவ்
உரிமைகளை காக்க போராடுவதற்கு தூண்டும் உத்வேகம்தான் தமிழ்நாடு. கூட்டாட்சி என்பது பரிசல்ல, உரிமை என்பதை மத்திய அரசுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். ஆலோசனைக் கூட்டத்தில் பாரத ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் கே.டி.ராமராவ் பேசியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில், கேரள முதல்வர், பஞ்சாப் முதல்வர், தெலங்கானா முதல்வர் உள்ளிட்ட 7 மாநிலங்களில் இருந்து 24 பேர் கலந்து கொண்டுள்ளனர். மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆகியவை பங்கேற்கவில்லை.
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!
Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!
{{comments.comment}}