திருவள்ளூர்: கவரப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில் உயர்மட்ட வல்லுநர் குழு ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்தும் ரயில்வே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதில் சதிச் செயல் அடங்கியிருக்கிறதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பாகமதி பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு மோதி விபத்திற்கு உள்ளானது. இதனால் 10 பெட்டிகள் தடம் புரண்டது. சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து நாசம் ஆகின. இந்த விபத்தில் சிக்கிய 1800க்கும் மேற்பட்டவர்களை மீட்டு அரசு சார்பில் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல் இந்த விபத்து சிக்கி காயமடைந்த 18 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் விபத்து ஏற்பட்டதற்கு காரணம் என்ன என்பது தொடர்பாக விசாரணைகள் மிகவும் தீவிர படுத்தப்பட்டு வருகிறது. கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் இதுதொடர்பாக ஒரு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுதவிர தற்போது கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் உயர்மட்ட வல்லுனர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர்மட்ட வல்லுநர் குழு அதிகாரிகள் நேரடியாக விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்று கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, விபத்து குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.. அதுகுறித்தும் பல்வேறு வகையான தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து நடந்த ரயில் சென்ற பாதையில் தண்டவாளம் விலகி இருந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. எனவே இது நாச வேலையா என்ற சந்தேகமும், கேள்வியும் எழுந்துள்ளது.
விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து தெற்கு ரயில்வே மேலாளர் ஆர் என் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், குண்டூர் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் கவரப்பேட்டை ரயில் நிலையத்தை கடக்கும் போது லூப் லையனில் சரக்கு ரயில் நின்று கொண்டிருந்தது. பயணிகள் ரயில் மெயின் லைனில் நிற்காமல் சென்றிருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் மெயின் லைனில் கிரீன் சிக்னல் போடப்பட்டிருந்தும் லூப் லையனில் பயணிகள் ரயில் சென்றதால் நின்றிருந்த சரக்கு ரயிலின் பின்புறம் மோதியது.
இதில் பயணிகள் ரயிலின் பெட்டிகள் கவிழ்ந்தன. ஓட்டுநர்கள் இருவரும் உயிர் தப்பினர். மோதிய வேகத்தில் பயணிகள் ரயில் எஞ்சின்களின் பின்புறம் உள்ள பெட்டியில் தீப்பிடித்தது. விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. உடனடியாக தீ அணைக்கப்பட்டு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டன. சம்பவ இடத்தில் ரயில்வே ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள், மீட்பு படையினர், மருத்துவர்கள், ஆகியோர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என கூறியுள்ளார்.
மெயின் லைனில் போக வேண்டிய ரயில் ஏன் லூப் லைனில் சென்றது என்ற கேள்வி தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஓட்டுநர்கள் எதற்காக லூப் லைனில் ரயிலை ஓட்டினார்கள் என்பதும் விசாரிக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட ரயில் நிலையத்தின் சிக்னல் கட்டுப்பாட்டு அறைக்கும் பொது மேலாளர் ஆர். என். சிங் நேரில் சென்று நேரடியாகவும் விசாரணை நடத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சிங்கம்-கழுகு கூட்டணியா?.. சிலாகிக்கும் நா.த.க.. சீமான் சொன்ன பதில்.. ரஜினியுடன் சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
{{comments.comment}}