சிங்கிள் சாங்.. "செவன்" கெட்டப்.. அடடா அடடா.. கத்ரீனா கைப் "ஹெவன்"ங்க!

Oct 21, 2023,02:56 PM IST

- சங்கமித்திரை


சென்னை: டைகர் 3 படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் ஏகப்பட்ட ஸ்பெஷல்களை போட்டு நிரப்பி வைத்துள்ளனர். ரசிகர்களுக்குப் பார்க்க பார்க்க திகட்டாத விருந்தாக இது அமையும் என்று அடித்துச் சொல்கிறார்கள் திரை விமர்சகர்கள்.


குறிப்பாக "லேகே பிரபு கா நாம்" என்ற பாடலில்  7 அதிரடியான தோற்றங்களுடன்  கத்ரீனா கைப் கலக்கியிருக்கிறாராம்.


டைகர் 3 படத்தில் நாயகியாக ஜொலித்திருக்கிறார் கத்ரீனா கைப். படத்தின் மிகப் பெரிய பலமே இவர்தான். இவர் இடம் பெற்ற ஒரு சண்டைக் காட்சி ஏற்கனவே வைரலாகி விட்டது. படம் குறித்த எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.


இந்த நிலையில் அவர் ஒரு பாட்டில் 7 விதமான கெட்டப்களில் வரும் தகவல் இணையதளங்களை படு சூடாக்கியுள்ளது. "லேகே பிரபு கா நாம்" பாடலில்  7 அதிரடியான தோற்றங்களில் தோன்றுவதுடன் தனது ஒட்டுமொத்த திரையுலக பயணத்தில் மிகசிறந்த பாடல்களில் ஒன்றாகவும் இருக்கும் என்றும் கூறுகிறார் கத்ரீனா கைப்.


இதுகுறித்து அவர் கூறுகையில், "லேகே பிரபு கா நாம்" பாடல் கண்ணை கவரும் பாடலாக உருவாகி இருக்கிறது. துருக்கியின் கப்படோசியாவின் சுவாசத்தை திணறவைக்கும் பின்னணியில் அமைந்துள்ள இந்த பாடல் எனக்கு காட்சி ரீதியாக மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றாக இருக்கும். மாஷால்லா மற்றும் ஸ்வாக் சே ஸ்வாகத்துக்குப் பிறகு எனக்குப் பிடித்த வைபவி மெர்ச்சன்ட்டுடன்  மீண்டும் ஒருமுறை இணைந்திருக்கிறேன்" என்கிறார் .






"லேகே பிரபு கா நாம்" பாடலில் ஒவ்வொன்றும் மறுக்க முடியாத கவர்ச்சி மற்றும் தனித்துவமான சில் -அவுட் தோற்றங்களை வெளிப்படுத்தும் விதமாக  7 குறிப்பிடத்தக்க தோற்றங்களை அனைதா  வடிவமைத்திருக்கிறார்" என்கிறார்.  இந்த பாடலின் டீசர் உடனடியாக வைரலாகியுள்ளது. பிரீத்தம் இசையமைப்பில் பென்னி தயாள் மற்றும் அனுஷா மணி பாடியுள்ள இந்தப்பாடலில் சல்மான் கானும் கத்ரீனாவும் நம்பமுடியாத கெமிஸ்ட்ரியை  வெளிப்படுத்தி உள்ளனர்.


இந்த பாடலில் இவர்கள் இருவருக்குமான அழகிய தோற்றத்தை பார்க்கும்போது இது இந்த பண்டிகை சீசனில் ஒரு பார்ட்டி ஆந்ததமாக நிச்சயமாக மாறும். கத்ரீனா  மேலும் கூறும்போது, "டைகர் வரிசையில் இருந்து வெளியாகும் பாடல்கள் எப்போதும் சூப்பர்ஹிட் பாடல்களாகவே இருந்திருக்கின்றன. அந்தவகையில்  இந்த "லேகே பிரபு கா நாம்" பாடலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக இருக்கும் " என்கிறார்.


மேலும் அவர் கூறுகையில், "டைகர் படங்களில் பாடல்கள்  ஹைலைட்டான அம்சங்களில் ஒன்றாகவே இருந்திருக்கின்றன.  இந்த பாடலில் டைகர் மற்றும் சோயா இருவருக்கும் இடையேயான அதிர்வையும் சக்தியையும் ஒரு புதிய பாணியில் வைபவி உள்ளடக்கி இருக்கும் விதத்தை நான் ரசிக்கிறேன். எங்கள் இருவரிடமிருந்தும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் பாடலின் துடிப்பான மற்றும் ஆற்றல் மிக்க உணர்வை இது உள்ளடக்கியது" என்கிறார்.


சல்மான் கானுடன் டான்ஸ் ஆடுவது என்றாலே கத்ரீனாவுக்கு ஜிலேபி சாப்பிடுவது போல. அவது ஒரு அற்புதமான அனுபவம் என்பதால் எப்போதும் சல்மானுடன் இணைந்து ஆட விரும்புவேன் என்று சிரித்தபடி கூறுகிறார் கத்ரீனா கைப். உண்மைதான்.. சல்மான் கான் & கத்ரீனா கைப் இந்திய சினிமா வரலாற்றில் எப்போதுமே மிகப்பெரிய ஆன்-ஸ்கிரீன் ஜோடி. அவர்கள் வரலாற்று வெற்றிகளையும் தலைமுறை தாண்டிய பாடல்களையும் வழங்கியுள்ளனர். 


தற்போது இருவரும் ஆதித்யா சோப்ராவின் ஸ்பை யுனிவர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள டைகர் 3 படத்திலும் மீண்டும் இணைந்து அசத்தியுள்ளனர். மனீஷ் சர்மா இயக்கியுள்ள டைகர் 3 நவம்பர்-12ஆம் தேதி ஞாயிறு தீபாவளியன்று திரைக்கு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்