புற்று நோய்.. என் பிள்ளைகளுக்குப் புரிய வைக்க பெரும் சிரமப்பட்டேன்.. இளவரசி கேட் மிடில்டன் உருக்கம்

Mar 24, 2024,05:01 PM IST

லண்டன்:  எனக்கு வந்துள்ள புற்றுநோயை குணப்படுத்தி விட முடியும் என்ற நம்பிக்கையை எனது பிள்ளைகளுக்குக் கொடுக்க, அவர்களுக்கு இதைப் புரிய வைக்க எனக்கு பெரும் சிரமமாக இருந்தது. இதனால்தான் எனக்கு புற்றுநோய் வந்திருப்பதை வெளியில் சொல்ல இத்தனை தாமதம் ஆனதாக இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன் கூறியுள்ளார்.


இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் மனைவி கேட் மிடில்டனுக்கு புற்றுநோய் தொற்று இருப்பதாக டாக்டர்கள் உறுதி தெரிவித்துள்ளனர்.  கேட் மில்டனுக்கு கடந்த ஜனவரி மாதம் வயிற்றில் ஆபரேஷன்  செய்யப்பட்டது. ஆபரேஷனுக்கு முன்  புற்று நோய் இல்லை என அறிவித்த மருத்துவர்கள் ஆப்ரேஷனுக்குப் பிறகு  புற்றுநோய் இருப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே கேட் மிடில்டன் வெளியுலகில் காணப்படவில்லை. இதனால் பலரும் சந்தேகம் கிளப்பத் தொடங்கினர்.


இந்த நிலையில்தான் தனக்கு புற்று நோய் வந்திருப்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார் கேட் மிடில்டன். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த மாதம் லண்டனில் எனக்கு வயிற்றில் மிகபெரிய ஆபரேஷன் செய்யப்பட்டது. அதில் எனக்கு புற்றுநோய் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்காக ஹீமோதெரபி கொடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி வந்தனர். 




இதன் காரணமாக தற்போது ஆரம்பகட்ட சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. எங்கள் குடும்பத்தின் நலன் கருதியே எனக்கு புற்றுநோய் இருப்பதை வெளியில் கூறாமல்  இருந்தேன். இந்த அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வந்து புற்றுநோய்க்கான சிகிச்சையை என்னால் தொடங்க தாமதமானது. மேலும் என் கணவரிடமும், என் குழந்தைகளிடமும் நிலைமையை எடுத்துக் கூறி அவர்களை சமாதானப்படுத்திய பிறகு நான் இந்த சிகிச்சையை தொடர்ந்து எடுத்து கொண்டு வருகிறேன். 


என் பிள்ளைகளுக்கு இதை புரிய வைக்க முடியவில்லை. அவர்களுக்குப் புரியவில்லை. எனக்கு ஒன்றும் ஆகாது, நான் குணமடைவேன் என்று அவர்களை நம்ப வைக்க, நம்பிக்கை தர நான் நிறைய போராட வேண்டியிருந்தது. இதனால்தான் என்னால் இதை உடனடியாக அறிவிக்க முடியவில்லை.


இப்போது நான் நலமுடன் இருக்கிறேன். இதிலிருந்து மீண்டு வர கவனம் செலுத்தி வருகிறேன். மனதளவிலும் உடலளவிலும் என்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறேன் என்று கூறியுள்ளார் கேட் மிடில்டன்.


விரைவில் குணமடையுங்கள் கேட் மிடில்டன்.. உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுத்த நம்பிக்கை நிச்சயம் பலிக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்