ஆத்தாடி.. "கருப்பன்" கழுத்தைப் பார்த்தீங்களா.. எத்தாத்தண்டி.. அசத்திய உரிமையாளர்!

Jan 17, 2024,06:36 PM IST

அலங்காநல்லூர்: தனது காளை கருப்பனுக்கு பிரமாண்ட தங்கச்சங்கிலி அணிவித்து அலங்காநல்லூர்  ஜல்லிக்கட்டு போட்டிக்கு அழைத்து வந்த உரிமையாளரால் பரபரப்பு ஏற்பட்டது.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி பல மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகவே நடைபெற்று வருகிறது. குறிப்பாக மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ் பெற்று விளங்குகிறது. ஜனவரி 15ம் தேதி நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், 16ம் தேதியான நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்நிலையில், இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி விறு விறுப்பாக நடைபெற்றது.




இப்போட்டியை காண பல்வேறு இடங்களில் இருந்து பார்வையாளர்கள் அலங்காநல்லூருக்கு படையெடுத்து வந்திருந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியால் அலங்காநல்லூர் முழுவதும் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது முதல் பரிசாக காளைக்கும், காளையை அடக்கும் வீரருக்கும் 8 லட்சம் மதிப்புள்ள கார் வழங்கப்பட உள்ளது. இவை தவிர்த்து எண்ணற்ற பரிசு பொருட்களும் பெற்றி பெறும் வீரருக்கும், காளைகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.


ஜல்லிக்கட்டு போட்டியில் 1200 காளைகள் கலந்து கொள்ள உள்ள நிலையில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த அஞ்சப்பர் ஹோட்டல்  உரிமையாளர் போட்டியில் கலந்து கொள்ள வந்த தனது காளைக்கு தங்கச்சங்கலி அணிவித்து அழைத்து வந்தார். இது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.  காளையின் உரிமையாளர் கூறுகையில், நான் அஞ்சப்பர் ஹோட்டல் உரிமையாளர். கிட்டத்தட்ட  45 வருடங்களாக மாடு வளர்த்து வருகின்றேன்.


இந்த மாடு 12வது வருடமாக பாலமேட்டு ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டது.  9 சைக்கிள், 3 தங்க காசு வாங்கியுள்ளது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியில் இந்த மாடு காரை பரிசாக வாங்கும் என்று அபார நம்பிக்கை உள்ளது. நான் 10 வயது முதல் மாடு வளர்த்து வருகிறேன். இந்த மாட்டிற்கு 19 லட்சத்தில் தங்கத்தில் ஆபரணம் செய்து வைத்துள்ளேன். வெள்ளியிலும் ஆபரணம் செய்து வைத்துள்ளேன். இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அரசு சிறப்பாக நடத்தி வருகிறது என்று கூறியுள்ளார்.


போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகளை, பல்வேறு விதங்களாக அதன் உரிமையாளர்கள் அலங்காரம் செய்து அழைத்து வந்துள்ளனர். இப்போட்டி மொத்தம் 10 சுற்றுக்கலாக நடைபெற உள்ளது. காலை 7  மணி முதல் மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


காளையை போட்டிக்காக மட்டும் யாரும் வளர்ப்பதில்லை. சொந்தப் பிள்ளை போல, மகன் போல, அண்ணன் தம்பி போலத்தான் வளர்ப்பார்கள். அந்த வகையில் மகனுக்கு கழுத்தில் சங்கிலி செஞ்சு போடுவதில்லையா.. அதுபோல இந்த காளைக்கும் அஞ்சப்பர் உரிமையாளர் போட்டு அழகு பார்த்துள்ளார். 


சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்