சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அடுத்தடுத்து கெளரவங்கள் சேர்ந்து கொண்டே போகின்றன. கடலுக்குள் பேனாவை நினைவுச் சின்னமாக வைக்கும் அளவுக்கு திமுக இறங்கி அடிக்க ஆரம்பித்துள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது அவரைப் போலவே தமிழக மக்களால் மறக்க முடியாத இன்னொரு தலைவரான ஜெயலலிதா நம் கண் முன்பு வந்து போகிறார். கருணாநிதிக்குக் கிடைத்த கெளரவங்கள் ஜெயலலிதாவுக்கு கிடைக்கவில்லை என்பதை வருத்தத்தையே ஏற்படுத்துகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை சில தலைவர்களை அத்தனை சீக்கிரம் மக்கள் மறக்க முடியாது, மறக்கக் கூடாது. அந்த வரிசையில் காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் நிரந்தரமாக நீடித்து நிற்பார்கள். இவர்கள் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் கிடையாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தமிழ்நாட்டுக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் நிறைய செய்துள்ளனர், மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் மறைந்தபோது அடுத்து வந்த தலைவர்கள், மறைந்த தலைவர்களை முறையாக கெளரவப்படுத்தியுள்ளனர். காமராஜர் மறைந்த பிறகு அவரை அடுத்து வந்த தலைவர்கள் உரிய முறையில் கெளரவப்படுத்தியுள்ளனர். காமராஜ் பெயரில் பல்கலைக்கழகம் உள்ளது. காமராஜர் பெயரில் பஸ் நிலையங்கள் உள்ளன. அதேபோல அண்ணாவுக்கு செய்யப்பட்ட கெளரவங்களின் பட்டியல் மிகப் பெரியது. கருணாநிதியும் சரி, எம்ஜிஆரும் சரி மாறி மாறி பல திட்டங்களை கொண்டு வந்தனர், பெயர் சூட்டினர்.
அம்மா திட்டங்கள் அதேபோலத்தான் எம்ஜிஆர் மறைந்த பிறகு ஜெயலலிதா அவருக்கு உரிய கெளரவத்தைக் கொடுத்தார். மரியாதை செய்தார். அந்த வரிசையில் ஜெயலலிதா மறைந்த பிறகு அவருக்குரிய கெளரவம் அவருக்குக் கிடைத்ததா என்றால் பெரும் கேள்விக்குறிதான் பதிலாக உள்ளது. ஜெயலலிதா மறைந்த பிறகு கிட்டத்தட்ட அவரை அதிமுக தலைமை மறந்தே போய் விட்டது. ஜெயலலிதாவுக்காக அகில இந்தியத் தலைவர்களை அழைத்து ஒரு இரங்கல் கூட்டம் கூட நடத்தவில்லை. ஜெயலலிதா பெயரை எந்தத் திட்டத்துக்கும் சூட்டவில்லை. அவர் உயிருடன் இருந்தபோது அவரை காக்காய் பிடிப்பதற்காக சூட்டப்பட்ட "அம்மா" திட்டங்களைத் தவிர புதிதாக எந்தத் திட்டத்திற்கும் ஜெயலலிதா பெயர் சூட்டப்படவில்லை. அவருக்கு பொது இடத்தில் ஒரு நல்ல சிலை கூட அமைக்கப்படவில்லை. அதிமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்ட சிலையும் கூட பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஜெயலலிதா போலவே இல்லை என்றும் கேலிக்கூத்தானது. ஜெயலலிதா பெயரை எந்த சாலைக்கும் சூட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. குறைந்தபட்சம் அவரது வீடு உள்ள போயஸ் தோட்டப் பகுதிக்குக் கூட அவரது பெயர் சூட்டப்படவில்லை. ஏன் அவர் வசித்து வந்த போயஸ் தோட்டத்து வீட்டையே கூட அரசால் கையப்படுத்த முடியவில்லை. மொத்தத்தில் ஜெயலலிதாவுக்குப் பிறகு நீடித்த அதிமுக ஆட்சி, ஜெயலலிதாவுக்கு கெளரவம் சேர்க்க எந்த பெரிய நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதெல்லாம் நிச்சயம் அதிமுகவினருக்கு ஏமாற்றம்தான். உயர்த்தி பிடிக்கப்படும் கருணாநிதி அதேசமயம், கருணாநிதியை திமுகவினர் மிக உயரத்தில் தூக்கிப் பிடித்துக் கொண்டு செல்கின்றனர். அவரது Legacy-ஐ அடுத்த தலைமுறைக்க மிக அழகாக எடுத்துச் செல்லும் வேலையை திமுக திறம்பட செய்து வருகிறது. அண்ணா அறிவாலயத்தில் அவரது சிலை திறக்கப்பட்ட நிகழ்வு தேசிய அளவில் பேசு பொருளானது. கருணாநிதி பெயரில் மதுரையில் பிரமாண்ட நூலகம் உருவாகி வருகிறது. அது திறக்கப்பட்டதும் ஆசிய அளவில���� அது பேசப்படும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கருணாநிதிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டு அதையும் குடியரசுத் துணைத் தலைவரை வைத்து திறந்து விட்டது திமுக. சென்னையின் புதிய அடையாளமாக அந்த சிலை உருவாகி விட்டது. சிலை திறக்கப்பட்டது முதல் தினசரி நூற்றுக்கணக்கானோர் அதைப் பார்க்க திரண்டு வருகின்றனர். இதோ இப்போது ரூ. 80 கோடி மதிப்பீட்டில் மெரீனா கடற்கரையிலிருந்து கடலுக்குள் பிரமாண்ட பேனா நினைவுச் சின்னத்தை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. திமுகவின் இந்த அதிரடியான அறிவிப்பு பல்வேறு சர்ச்சைகளையும், சலசலப்புகளையும் ஏற்படுத்தினாலும் கூட திமுக இதை செய்யாமல் விடாது என்றே தெரிகிறது. அப்படி ஒரு வேளை பேனா சிலை அமைக்கப்பட்டால் உலக அளவில் இது பிரபலமான நினைவிடமாக மாறக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இப்படி அடுத்தடுத்து கருணாநிதியைத் தாங்கிப் பிடிக்கிறது திமுக. தொடர்ந்து கருணாநிதியின் கொள்கைகளையும் அப்படியே எடுத்துக் கையாண்டு வருகிறது. திராவிடத்தை இந்த அளவுக்கு இதுவரை திமுக தூக்கிப் பிடிக்கவில்லை என்று சொல்லும் அளவுக்கு அதை திறம்பட எடுத்தாளுகிறது. இத்தோடு ஒப்பிட்டால் ஜெயலலிதாவை நினைத்து பரிதாபம்தான் ஏற்படுகிறது. ஜெயலலிதாவின் ஆளுமை
ஜெயலலிதா மீது ஆயிரம் சர்ச்சைகள், விமர்சனங்கள் இருந்தாலும் அவரது ஆளுமையை யாரும் கேள்வி கேட்க முடியாது, விமர்சிக்க முடியாது. ஆண் தலைவர்கள் செய்யத் தயங்கிய, செய்யத் தவறியதைக் கூட தைரியமாக செய்து காட்டியவர் ஜெயலலிதா. முடிவெடுப்பதில் தெளிவுடன் இருந்தவர். தவறு செய்தால் அதை திருத்திக் கொள்ளவும் தயங்காதவர். பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். கருணாநிதி கூட இறங்கிப் போய் விடுவார். ஆனால் ஜெயலலிதா கடைசி வரை பாஜகவை ஆட்டிப் படைத்தவர்.
நீட் தேர்வு ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை தமிழகத்திற்குள் நுழைய முடியவில்லை. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு கெஜட்டில் வெளியாக ஜெயலலிதாதான் முக்கியக் காரணம். இப்படி பல்வேறு வழிகளிலும் தமிழ்நாட்டு மக்களுக்காக பலவற்றை செய்தவராக திகழ்கிறார் ஜெயலலிதா. ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு அவருக்குரிய கெளரவம் அவருக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை.
மாறி மாறி அடித்துக் கொண்ட தலைவர்கள்
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக தலைவர்கள் தலைமைப் பொறுப்புக்கு அடித்துக் கொண்ட
நேரம்தான் அதிகமாக இருந்தது.ஒருவர் மாற்றி ஒருவர் காலை வாருவது, பதவிகளை அனுபவிப்பது,
பாஜகவுக்கு ஜால்ரா போடுவது, பாஜகவினர் சொல்வதைக்கேட்பது என்று தங்களது பிழைப்பைப்
பார்க்கத்தான் அவர்களுக்கு அதிக நேரம் இருந்ததே தவிர ஜெயலலிதாவைப்
பற்றிக் கவலைப்பட அவர்களுக்கு நேரம் இல்லை.
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}