- ஸ்வர்ணலட்சுமி
திருக்கார்த்திகை தீபத் திருநாளுக்கு பல சிறப்புகள் உண்டு. சிவ பெருமான், ஜோதி வடிவமாக காட்சி அளித்த நாள் மட்டுமல்ல, பார்வதி தேவியின் கடும் தவத்தை ஏற்று, அவருக்கு தன்னுடைய உடலில் சரி பாதியை சிவ பெருமான் அளித்து, அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளித்ததும் இந்த கார்த்திகை தீபத் திருநாளில் தான். கிருத்திகை நட்சத்திரமும், பெளர்ணமியும் இணைந்த வரும் இந்த நாளில் சிவ பெருமானையும், முருகப் பெருமானையும் சேர்த்து வழிபடுவதால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்ட போது அதனை தீர்த்து வைப்பதற்காக அடிமுடி காண முடியாத வண்ணம் ஜோதி பிளம்பாக ஈசன் காட்சி அளித்த திருநாளையே கார்த்திகை தீபத் திருநாளாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். இந்த நன்னாளில் வீடுகளில் நாம் 27 தீபங்கள் ஏற்றி, இறைவனை ஜோதி வடிவமாக வழிபாடு செய்வது வழக்கம். அவரவர் வசதிக்கு ஏற்ப தீபங்கள் ஏற்றி வழிபடலாம்.
இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருநாள் டிசம்பர் 13ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. பொதுவாக வருடந்தோறும் கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரமும், பெளர்ணமியும் சேர்ந்து வரும் நாளில் தான் திருக்கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கிருத்திகை நட்சத்திரம் டிசம்பர் 13ம் தேதியும், பெளர்ணமி டிசம்பர் 15ம் தேதியும் வருகிறது. அதனால் கிருத்திகை நட்சத்திரம் வரும் நாள் என்ற அடிப்படையில் டிசம்பர் 13ம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்பட உள்ளது.
கார்த்திகை விரதம் :
கார்த்திகை தீபத்திருநாளன்று விரதம் இருப்பவர்கள் முழு நாளும் உணவு சாப்பிடாமல் விரதம் இருக்க முடியாவிட்டால் பால், பழம், நிறைய தண்ணீர் ஆகியவற்றை சாப்பிட்டு விரதம் இருக்கலாம். அவரவர் உடல்நிலையைப் பொறுத்து விரதம் இருக்கலாம்.
எப்போது, எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்?
1. திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையார், அர்த்தநாரீஸ்வரராக வருடத்திற்கு ஒருமுறை காட்சி தருவார். வெறும் 3 நிமிடம் தான் அந்தக்காட்சியை காண முடியும். அவர் காட்சி கொடுத்ததும், மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். அந்த காட்சியை தரிசித்து விட்டு தான் நாம் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும்.
2. மாலை 5.30 மணிக்கு முன்பாக விளக்குகளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து, பஞ்சு திரி போட்டு, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். திருவண்ணாமலையில் மலை மீது தீபம் ஏற்றியதும் அதை தொலைக்காட்சியில் பார்த்து விட்டு, மாலை 6 மணிக்கு பிறகு வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும்.
3. அண்ணாமலையாருக்கு அரோகரா என சொல்லி முதலில் வீட்டின் வாலில் 2 தீபம் ஏற்றி விட்டு, பிறகு பூஜை அறையில் விளக்குகள் ஏற்றி விட்டு, அதன் பிறகு வீட்டின் மற்ற இடங்களில் விளக்கேற்ற வேண்டும்.
4. வீட்டின் ஹாலில் குத்துவிளக்கு ஏற்றி, அதனைச் சுற்றி மலர்களால் அலங்கரித்து வைப்பது சிறப்பு. சமையல் அறையில் 2 தீபம், பின்புறம் 2 தீபம், படிகட்டுகளில் தீபங்கள் ஏற்ற வேண்டும். மொட்டை மாடி, பால்கனி என அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்ற வேண்டும்.
5. குழந்தைகள் வீட்டில் இருந்தால் ஓடி விளையாடுவார்கள். அவர்களை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Yearender 2024: நாக்கில் வச்சதும்.. நச்சுன்னு சுவைக்கும் மாங்காய் ஊறுகாய்க்கு.. தேடுதலில் 2வது இடம்!
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி மற்றும் பழங்களின் இன்றைய விலை என்ன தெரியுமா?
Gold rate.. ஏற்றமும் இல்லை, இறக்கமும் இல்லை... தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!
இயக்குநர் சீனு ராமசாமியும் டைவர்ஸ்.. 17 வருட திருமண வாழ்விலிருந்து விடைபெறுவதாக அறிவிப்பு!
HBD Rajinikanth.. 75வது பிறந்த நாள்.. தலைவர்கள், திரையுலகின் வாழ்த்து மழையில் சூப்பர் ஸ்டார் ரஜினி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - டிசம்பர் 12, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : மேஷம் ராசி வாசகர்களே.. இந்த வருஷம் உங்க வருஷம்.. ஜமாய்ங்க!
கார்த்திகை தீபத் திருநாள் ஸ்பெஷல் நைவேத்தியம்...கார்த்திகை பொரி பற்றி இதெல்லாம் தெரியுமா?
சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக மழை.. பள்ளிகளுக்கு லீவு இல்லை.. மாணவர்கள், பெற்றோர் கவலை!
{{comments.comment}}