- சகாயதேவி
பெங்களூரு: இந்த தலைமுறை எந்த அளவுக்கு ஜாலி ஜாலி என வாழ்க்கையை அனுபவிக்கத் துடிக்கிறதோ அதே அளவுக்கு கூடுதல் கவனத்தை செலுத்தவும் சமயங்களில் மறந்து விடுகிறது. இப்படித்தான் ஒரு இளைஞர் தனது உயிரைப் பரிதாபமாக பறி கொடுத்துள்ளார் கர்நாடகாவில்.
விளையாட்டு எப்போதுமே விபரீதத்தில்தான் முடியும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.
கர்நாடகா மாநிலம் ஷிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத்குமார். 23 வயதான இவர் தனது நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை ஷிவமொக்கா மாவட்டம் கொல்லூர் அருகே உள்ள அரசினகுன்டி நீர்வீழ்ச்சிக்குச் சென்றிருந்தார். கன மழை காரணமாக நீர்வீழ்ச்சியில் தண்ணீர் பேயாய் கொட்டிக் கொண்டிருந்தது. அங்கிருந்த பாறைகள் எல்லாம் ஈரத்தில் வழுவழுப்புத்தன்மையுடன் காணப்பட்டன.
இந்த பின்னணியில் இன்ஸ்டாகிராமுக்காக ரீல்ஸ் எடுக்க ஆரம்பித்தனர் சரத்குமார் நண்பர்கள். இதற்காக சரத்குமார் உயிரையும் பணயம் வைத்து, உயிரைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாமல் அபாயகரமான ஒரு பாறை மீது ஏறி நின்று ரீல்ஸுக்காக போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது கால் ஸ்லிப் ஆகி கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக போய்க் கொண்டிருந்த நீரில் விழுந்தார்.
என்ன நடந்தது என்பதை ஊகிக்கும் முன்பாகவே அவர் நீரில் வெகு தூரம் அடித்துச் செல்லப்பட்டு விட்டார். இந்த சம்பவம் முழுவதும் அவரது நண்பர் எடுத்த வீடியோவில் பதிவாகியுள்ளது. பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவம்.
இளம் சமுதாயத்தினருக்கு ரீலிஸ் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் இது போன்ற சம்பவங்கள் நமக்கு ஒரு அலெர்ட் மெசேஜ் தான் மக்களே. மலை முகடுகளில் நிற்பது, காட்டு வெள்ளம் போகும்போது அங்கு போய் ரீல்ஸ் எடுப்பது, புயல் வீசும்போது கடலுக்கு பக்கத்தில் போய் செல்பி எடுப்பது.. என பல இடங்களில் ரிஸ்க் எடுத்து லைக் வாங்குவது திரில்லானது தான் என்றாலும் கூட இதெல்லாம் உங்களது வாழ்க்கைக்கும் உலை வைத்து விடும் என்பதை மறந்து விடக் கூடாது.
சமூக வலைத்தளங்களில் நீங்கள் ரிஸ்க் எடுத்து எடுக்கும் இது போன்ற வீடியோக்கள் உங்கள் கடைசி விடியோவாக மாறும் அவலம் நிகழும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருங்கள்.
செங்கல்பட்டு அருகே விபரீதம்.. படுவேகமாக வந்த கார் மோதி.. மாடு மேய்த்த 5 பெண்கள் பரிதாப மரணம்!
Sabarimalai Iyappan temple.. சபரிமலை 18 படிகள் எதை உணர்த்துகின்றன தெரியுமா ?
தமிழ்நாட்டுக்குள் சமூகநீதியை நுழைய விட மறுக்கிறது திமுக அரசு.. டாக்டர் ராமதாஸ்
விடாமுயற்சி எப்பன்னு தெரியாது.. ஆனால் குட் பேட் அக்லி.. பொங்கலுக்கு கன்பர்ம்ட்.. சூப்பர் நியூஸ்!
15 வருட நட்பு.. காதலரை சூசகமாக அறிமுகப்படுத்தி வைத்த கீர்த்தி சுரேஷ்.. குவியும் வாழ்த்துகள்!
Cyclone Fengal.. நவம்பர் 30ம் தேதி பரங்கிப்பேட்டை- சென்னை இடையே கரையைக் கடக்கும்.. பிரதீப் ஜான்
Cyclne Fengal.. இன்று மாலை 5.30க்கு பெங்கல் புயல் உருவாகிறது.. தனியார் வானிலை ஆர்வலர் செல்வக்குமார்
Chennai climate.. வாடை வாட்டுது.. செம குளிரு.. ஜிலுஜிலு காத்து.. இது சென்னையா இல்லை ஊட்டியா??
48 வயதைத் தொட்டார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. முதல்வர் கொடுத்த முத்தம்.. குவியும் வாழ்த்துகள்!
{{comments.comment}}