கர்நாடகாவில் துணிகரம்.. ஏடிஎம் மைய ஊழியரை சுட்டுக் கொன்று.. பணப் பெட்டியுடன் தப்பிய கொள்ளையர்கள்

Jan 16, 2025,04:46 PM IST

பீதர்: கர்நாடக மாநிலம் பீதர் நகரில் ஏடிஎம் மையத்தில் வங்கி ஊழியர்கள் பணத்தை நிரப்பிக் கொண்டிருந்தபோது பணக்கட்டுக்கள் இருந்த பெரிய பெட்டியை 2 கொள்ளையர்கள் துணிகரமாக கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்களைத் தடுக்க முயன்ற வங்கி ஊழியர்கள் மீது கொள்ளைக்காரரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார்.


பீதரில் உள்ள ஒரு ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்ப பலத்த பாதுகாப்புடன் வங்கி ஊழியர்கள் வந்திருந்தனர். அப்போது பணப் பெட்டியை இறக்கி ஏடிஎம் மையத்தில் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் இரண்டு நபர்கள் வந்தனர்.




துப்பாக்கி சகிதம் வந்திருந்த அவர்கள் மின்னல் வேகத்தில் ஊழியர்களைத் தாக்கி பணப் பெட்டியைப் பறித்தனர். அவர்களை வங்கி ஊழியர்கள் தடுக்க முயன்றபோது துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஒரு வங்கி ஊழியர் குண்டு பாய்ந்து பரிதாபமாக பலியானார். இதையடுத்து கையில் கிடைத்த பெரிய பெட்டியைத் தூக்கிக் கொண்டு பைக்கில் வைத்துக் கொண்டு இரு கொள்ளையர்களும் தப்பிச் சென்றனர்.


தூக்க முடியாமல் அந்தப் பெட்டியை வண்டியில் அவர்கள் வைத்துக் கொண்டு தப்பிய காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.  சம்பவம் நடந்த இடத்திற்கு எதிரேதான் எஸ்பிஐ வங்கியின் தலைமை கிளை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கர்நாடக மாநிலத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் துணிச்சலுடன், மக்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் இப்படி துணிகரமாக கொள்ளையர்கள் நடந்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொள்ளையர்களை பொதுமக்கள் தரப்பில்  சிலர் தடுக்க முயன்றனர். ஆனால் கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதால் பொதுமக்கள் யாரும் அவர்களைத் தடுக்க முடியாமல் போனது.


இரு கொள்ளையர்களையும் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இப்பவே தலை தூக்கும் வெயில்.. இன்றும், நாளையும் அதிகபட்சமாக 2 முதல் 3 டிகிரி வரை உயர வாய்ப்பு

news

கிருஷ்ணகிரி அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. 3 ஆசிரியர்கள் அதிரடி கைது!

news

திருப்பரங்குன்றத்தை வைத்து.. திமுக ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்த முயல்கிறது பாஜக.. அமைச்சர் சேகர்பாபு

news

திருப்பரங்குன்றம் விவகாரம்.. முதல்வர் மென்மையாக இருக்கக் கூடாது.. செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

news

படகில் சென்று.. திரிவேணி சங்கமத்தில்.. 3 முறை புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி

news

அஜீத் ரசிகர்களே ரெடியா.. விடாமுயற்சி நாளை ரிலீஸ்.. சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி

news

144 தடை உத்தரவு வாபஸ்.. திருப்பரங்குன்றம் மலை கோவில், தர்காவுக்குச் செல்ல போலீஸ் அனுமதி!

news

சாம்சங் நிறுவனத்தில் மீண்டும் சர்ச்சை,3 தொழிலாளர்கள் சஸ்பெண்ட்..தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

news

ஓம் சரவணபவ.. வாழ்வில் வளம் பெற தை கிருத்திகை விரதம்.. பிப்ரவரி 6.. மறவாதீர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்