முடா வழக்கு: எனக்கு எதிரான சதிச் செயலைக் கண்டு ஒருபோதும் அஞ்ச மாட்டேன்.. சித்தராமையா

Sep 24, 2024,05:50 PM IST

பெங்களூர்: முடா முறைகேடு வழக்கில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவை விசாரிக்க தடை இல்லை என கர்நாடகா உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் சித்தராமையாவின் முதல்வர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை எடுத்துக்கொண்டு, நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலத்தை வழங்கியது.இந்த இடம் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால், அரசுக்கு  4000 கோடி  இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாஜக உள்ளிட்ட எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.




இந்நிலையில், சமூக ஆர்வலர்கள் டி.ஜே.ஆபிரகாம், பிரதீப் குமார், சிநேகமாயி கிருஷ்ணா ஆகியோர் சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. முதல்வர் மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி தேவை என்பதால், சமூக ஆர்வலர்கள் மூவரும் ஆளுநரை சந்தித்து புகார் அளித்தனர். இந்த முடா முறைகேடு குறித்து முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த கர்நாடக ஆளுநர் ஆகஸ்ட் 17ம் தேதி அனுமதி கொடுத்தார். இதனை எதிர்த்து முதல்வர் சித்தராமையா தரப்பில் ஆகஸ்ட் 19ம் தேதி கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த  வழக்கை விசாரித்த நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார்.


இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நாகபிரசன்னா கூறுகையில், தன் அதிகாரத்தை பயன்படுத்தி சுதந்திரமாக விசாரணைக்கு அனுமதி வழங்கிய ஆளுநரின் நடவடிக்கையில் எந்த தவறும் இல்லை. அதை எதிர்த்து மனு தாக்கல் செய்த முதல்வர் சித்தராமையாவின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், புகார் குறித்து சந்தேகத்திற்கு இடமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். ஏனெனில், முதல்வரின் நடவடிக்கையால் பலன் பெற்றவர்கள் வெளியாட்கள் அல்ல, முதல்வர் சித்தராமையாவின் குடும்ப உறுப்பினர்களே பயன் பெற்றுள்ளார்கள். சித்தராமையாவுக்கு எதிரான விசாரணைக்கு அனுமதி அளித்த ஆளுநரின் உத்தரவு எந்த விதத்திலும் உள்நோக்கம் கொண்டதல்ல என்று தெரிவித்துள்ளார்.


இதனால் சித்தராமையா விசாரணையை எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது பதவிக்கும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.


அஞ்ச மாட்டேன்- சித்தராமையா


இதற்கிடையே உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து கருத்து தெரிவித்துள்ள சித்தராமையா, பாஜக - மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர்களின் சதிச் செயலுக்காகவோ அல்லது ராஜ்பவனின் அதிகார துஷ்பிரயோகம் கண்டோ நான் ஒரு போதும் அஞ்ச மாட்டேன். கர்நாடக மக்கள் என்னுடனும், எனது அரசுக்கு ஆதரவாகவும் உள்ளேன் என்று கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்